தூத்துக்குடி, செப்.18- தூத்துக்குடி மாவட்டம் திருவை குண்டம் வட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிங்கத்தாக்குறிச்சி மற்றும் ஆலந்தா ஊராட்சி பகுதிகளில் நடை பெற்று வரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் ஞாயிறன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்கத்தாக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில் நடைபெற்றுவரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், சுகாதார நிலையத்தில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்தும் முறைகளை கேட்ட றிந்தார்.
மேலும், சுகாதார நிலையத்தில் பரா மரிக்கப்பட்டு வரும் கோப்புகள், மருந்து இருப்பு கோப்புகள், நோயாளிகள் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை பார்வை யிட்டு ஆய்வு செய்ததோடு, பொதுமக்க ளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்து கள், மாத்திரைகள் உட்பட அனைத்தும் தடையின்றி கிடைத்திட தேவையான வற்றை இருப்பு வைத்திட அறிவுறுத்தி னார். அதனைத் தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காசிலிங்க புரத்தில் உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன் றிய துவக்கப்பள்ளியில் அமைந்துள்ள வாக் குச்சாவடி எண் 172 இல் வாக்காளர் அடை யாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்ப தற்காக நடைபெற்றுவரும் சிறப்பு முகா மினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டார். ஆலந்தா ஊராட்சிக்குட்பட்ட சவலாப் பேரியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக சுய தொழில் தொடங்கும் திட்டத் தின் கீழ் ரூ.50 ஆயிரம் மதிப்பில் முருகேசன் என்பவருக்கு புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பாலகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவில் அன்னதான மண்டபத்தில் நடை பெறும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகா மினை பார்வையிட்டார். ஆய்வில், துணை இயக்குநர் (சுகாதா ரப் பணிகள்) மரு.பொற்செல்வன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மரு. சிவசங்கரன், தூத்துக்குடி வருவாய் கோட் டாட்சியர் மா.சிவ சுப்பிரமணியன் உட்பட அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.