districts

img

பள்ளி மாணவர்களுக்கான நல அமைப்பு குழு துவக்கம்

இராமநாதபுரம், ஜூலை 4- இராமநாதபுரம் மாவட் டம், பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி கூட்ட ரங்கில் ஜூலை 4 அன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் இணைந்து 6 முதல்  12 ஆம் வகுப்பு வரை படிக் கும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான (CHILD  HOUSE) மாணவ நல அமைப்பு சங்கம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. விஷ்ணு சந்திரன் தலைமை யேற்று மாணவ நல அமைப்பு சங்கத்திற்கான இலச்சினை யை வெளியிட்டார். பின்னர் ஆட்சியர் பேசு கையில், இராமநாதபுரம் மாவட்டம் தொழில்துறை யில் நடுநிலையில் இருந்து வந்தாலும் கல்வியை பொறுத்தவரை முன்னோடி மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகின்றன. இந் நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவி களுக்கு கல்வி மற்றும் விளையாட்டு அறிவு திறனை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறும் அளவிற்கு  தேவையான பயிற்சிகளை வழங்கி ஒவ்வொரு மாண வரின் திறமையை மேம் படுத்தும் வகையில் மற்ற இடங்களை போல் இங்கு மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து ஆரோக்கி யமான போட்டியை உரு வாக்கி அதன் மூலம் அவர்  களின் அறிவுத்திறன் மேம்  பாடு அடைந்திடும் வகையில்  மாணவ நல அமைப்பு உரு வாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) வி.எஸ்.நாராயண சர்மா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ஆசிரியர் பயிற்சி மைய பேராசிரியர் டேவிட், முகவை சங்கமம்  செயலாளர் வான்தமிழ் இளம் பரிதி, மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;