திருவில்லிபுத்தூர்,செப்.23- திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் 22-23 முதலாண்டு கணிணி பயன்பாட்டுத்துறை, பிசிஏ ,எம்சிஏ, பிஎஸ்சி சிஎஸ்-ஐடி, எம்எஸ்சி கணிணியியல் 22-23 பேட்ச் மாணவர்க ளுக்கு வகுப்புகளும்,புத்தாக்க பயிற்சியும் துவக்க விழா பல்கலை வேந்தர் முனை வர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் பத்து நாள் பயிற்சியைத் வைத்தார். பதிவாளர் முனைவர் வி.வாசு தேவன் வாழ்த்துரை வழங்கினார். டீன் பி.தீபலக்ஷமி வரவேற்றார். ஈஸ்ட் இந்தியா கம்பெனி மேனேஜர் ஸ்டீபன் தினகரன், டிசிஎஸ் ஐகான் மண்டல தலை வர் டி.சுரேஸ்குமார், டிசிஎஸ்ஐகான் ஆலோ சகர் சிபானி மொஹாபாத்ரா புத்தாக்கப் பயிற்சியில் பேசினர் துறைத்தலைவர் கே.கார்த்தீபன் நன்றி கூறினார். மாணவர்கள் தங்கள் பெற்றோர்க ளுடன் கலந்துகொண்டனர். பேராசிரியர் கள் பிரதீப்கந்தசாமி,சத்தீஷ் குமார், அருண் ஆகியோர் விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.