districts

img

கல்லூரி மாணவர் மணிகண்டன் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுக!

இராமநாதபுரம், டிச.18- இராமநாதபுரம் மாவட்டம் நீர் கோழி ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் காவல்துறை தாக்குதலால் மரண மடைந்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முது குளத்தூர் பேருந்து நிலையம் அரு கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு முதுகுளத் தூர் தாலுகா செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினரும் எம். சின்னத் துரை, மாவட்டச் செயலாளர் வி. காசி நாததுரை, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கலையரசன், கண்ணகி,  ராஜ்குமார், கருணாகரன், தாலுகா செயலாளர்கள் மகாலிங்கம், போஸ், மாரிமுத்து, ஜெயகாந்தன், முருகன், சிவா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கணேசன், தட்சிணாமூர்த்தி, அட்வ கேட் சந்திரசேகரன், முத்துவிஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை பேசிய தாவது:  விசாரணைக்காக காவல் நிலை யம் அழைத்துச் செல்லப்பட்ட மாண வர் மணிகண்டன் முன்னதாக பொது வெளியில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட் டுள்ளார். பின்னர் மணிகண்டன் தாயாரை வரவழைத்து அவரிடம் பேப்பரில் ரேகை வாங்கி அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்.  மணிகண்டன் உடற்கூராய்வு நடப்பதற்கு முன்னதாகவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணி கண்டன் பாம்பு கடித்து இறந்து விட்டார் பூச்சி மருந்து சாப்பிட்டு இறந்துவிட் டார் என்ற செய்திகளை மணிகண் டனின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள், விவரங்கள் கேட்க சென்ற சிபிஎம் நிர்வாகி முருகன் உள்ளிட்டோ ரிடம் கூறியதுடன் திரும்பத் திரும்ப அதையே செய்தியாக தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத் திட வேண்டும்,

மாணவனை தாக்கிய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுப்பதுடன் இதுதொடர்பாக சிபி சிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மணிகண்டன் குடும்பத்தினரை சந்தித்து எம்.சின்னத்துரை எம்எல்ஏ ஆறுதல் கூறினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலை யரசன், வழக்கறிஞர் சந்திரசேகரன், தாலுகாச் செயலாளர் முருகன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

;