இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றியம், மஞ்சக்கொல்லை ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், கிராம மக்களை நேரில் சந்தித்து அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெறுவது மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து கேட்டறிந்தார். ஊராட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.