districts

ஆண்டிபட்டி அருகே வனப்பகுதியில் பழங்குடியின பெண்ணை தாக்கிய கரடி

தேனி, ஜூலை 2- ஆண்டிபட்டி அருகே வனப்பகுதியில் மூலிகை பறிக்க சென்ற பழங்குடியின பெண்ணை கரடி தாக்கிய சம்பவம் அப்  பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே  உள்ள கதிர்வேல்புரம் பழங்குடியின கால னியை சேர்ந்தவர் குமார் என்பவரின் மனைவி செல்வி. பழங்குடியின பெண் ணான இவர், அங்குள்ள வேலப்பர் கோவில் மலைப்பகுதியில் விறகு மற்றும் மூலிகை களை பறித்து விற்பனை செய்து , பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை செல்வி காட்டுப்பகுதியில் மூலிகை  பறிப்பதற்காக சென்றார். வேலப்பர் கோவில் மலையில் உள்ள ஐந்துகல் வனப்  பகுதியில் சென்ற போது புதர் பகுதியில் இருந்து திடீரென பாய்ந்து வந்த கரடி ஒன்று, செல்வியை பலமாக தாக்கியது. கரடி கடித்து, நகங்களால் கீறியதால் செல்வியின் முதுகில் பலத்த காயம் ஏற்  பட்டது. உடனடியாக கரடியிடம் இருந்து தப்பித்து மலை அடிவாரத்திற்கு வந்த  செல்வி மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட அப்பகுதியினர் காயமடைந்த செல்வி யை மீட்டு ஆம்புலன்சு மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இந்த சம்பவம் குறித்து ராஜ தானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூலிகை பறிக்க சென்ற பழங்குடியின பெண்ணை கரடி தாக்கிய சம்பவம் கதிர்வேல்புரம் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.