நாகர்கோவில், டிச. 6- கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பத்மநாபுரம் அரண்மனையின் சுவர் இடிந்து விழுந்தது. 1956 இல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தபோது ஏற்படுத்திய ஒப்பந்தத்தின்படி, இந்த அரண் மனை கேரள அரசின் கட்டுப் பாட்டில் உள்ளது. கேரள அரசின் தொல்லியல் ஆராய்ச்சித் துறை யின் பராமரிப்பில் இருந்து வரு கிறது. கல் கோட்டையின் நடுவே, மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில், திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சி யின் போது பிரம்மாண்டமாக கட்டப்பட்ட பத்மனாபபுரம் அரண் மனையில் உள்ள கட்டிடங்கள் கலைநயத்தோடு மரங்களால் செதுக்கப்பட்டவை. மேலும் அதைச் சுற்றியுள்ள கோட்டைச் சுவர் தமிழக அரசின் பொ துப்பணித்துறையின் கட்டுப் பாட்டில் உள்ளது. சுற்றுலா தலங்களுக்கு பெயர் பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இந்த அரண் மனை மற்றொரு சிறப்பு. இந்த அரண்மனையின் சிறப்பை அறிந்து,
உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல் கின்றனர். 18 ஆயிரம் மீட்டர் நீளம் கொண்ட சுற்றுச்சுவர் மன்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சி காலத்தில் 1744 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 20 அடி உயரம் கொண்ட சுவரின் கீழ்ப்பகுதியில் நீளமான பாறாங்கற்களை கொண்டும். அதன்மேல் வெட்டுக்கற்களாலும் கம்பீரமாக கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே சுற்றுச்சுவர்கள் முற்புதர்களாலும் செடியின் வேர்களாலும் பெயர்த்து எடுக்கப் பட்டு பலகீனமடைந்த நிலையில் காணப்பட்டது.
கடந்த மாதங்க ளில் பெய்த கனமழையால் மேலும் வலுவிழந்துபோனது. தற்போது கோட்டை சிதில மடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. ஞாயிறன்று (டிச.5) நள்ளிரவு சிறுகடை பகுதியில் கோட்டைச் சுவர் இடிந்து விழுந்தது. இத னால் இரு சக்கர வாகனம் ஒன்று முழுவதுமாக சேதமடைந்தது. இதை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தக்கலை வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின் மற்றும் கட்சி தோழர்கள் நேரில் பார்வை யிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோட்டை பராமரிப்பு குறித்து கேட்ட போது அதை பற்றிய தெளிவான ஆவணங்கள் இல்லையென்று பதில் வந்துள்ளது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை. ஆனால், எந்நேரமும் பாதிப்பு ஏற்படலாம் என மக்கள் பீதியில் உள்ளனர். அரசு உட னடியாக தலையிட்டு உயிர் சேதங்களை தவிர்க்க வேண்டும் என தக்கலை வட்டார செயலா ளர் சுஜா ஜாஸ்பின் கூறினார் .