districts

கம்யூனிச இயக்கத்தின் நட்சத்திரமாக ஜொலித்து கொண்டே இருப்பார் தோழர் என்.ராமகிருஷ்ணன்

மதுரை, டிச.13- கம்யூனிச இயக்கத்தின் நட் சத்திரமாக தோழர் என்.ராம கிருஷ்ணன்  ஜொலித்துக் கொண்டே இருப்பார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தி னார். இந்திய கம்யூனிச இயக்கத் தின் மூத்த தலைவர், காலப் பெட்டகமாக திகழ்ந்த எழுத்தா ளர் என்.ராமகிருஷ்ணன் அவர் கள் ( வயது 81) டிசம்பர் 12 அன்று மதுரையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்தனர். சிபிஎம், சிபிஐ தலைவர்கள், தோழர்கள், பல்வேறு கட்சியினர், அமைப்பி னர் அவரது உடலுக்கு மாலை யணிவித்து அஞ்சலி செலுத்தி னர். 

தீக்கதிர் அலுவலக வளா கத்தில்  மாநிலச் செயற்குழு உறுப் பினரும் தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் இராமலிங்கம் தலை மையில்  இரங்கல் கூட்டம் நடை பெற்றது.  இதில் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன்  பேசி யதாவது:   மூத்த எழுத்தாளர் என்.ராம கிருஷ்ணன் அவர்கள் கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவராக வும் ஆவணக்காப்பகமாகவும் திகழ்ந்தவர். தில்லியில் கட்சியின் தலைமை அலுவலகம், நாடா ளுமன்ற உறுப்பினர்களின் அலு வலகத்தில் பணிகளை திறம்படச் செய்தவர்.தமிழக கம்யூனிச இயக்கத்திற்கு பதிவு செய்யப் பட்ட வரலாறு இருக்கிறது என் றால், அதற்கு தோழர் என்.ராம கிருஷ்ணனின் பெரும் உழைப்பே காரணமாகும். தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களுக்கு நடந்து சென்றும் சைக்கிளில் சென்றும் பேருந்துகளில் நீண்ட தூரம் பயணித்தும் பலரிடம் உரையாடி, அவற்றை எழுத்துக் களாக தொகுத்தவர். கட்சியின் மாவட்ட வரலாறுகளையும் மூத்த தலைவர்களின்  வரலாறுகளை யும் புத்தகங்களாக  எழுதி வெளி யிட்டு, மகத்தான பங்களிப்பைச் செய்தவர். கடந்த காலத்தில் நடைபெற்ற கட்சியின் இயக் கங்கள் , அரசியல் தகவல்கள், தலைவர்கள் குறித்து தொலை பேசியில் தொடர்பு கொண்டுகேட் டால், உடனே பதில் சொல்லி, விளக்கம் அளிப்பார். புகழ்ச்சிக்கு ஆசைப்படாதவர்; அதை விரும்பாதவர்.  

நமது கட்சியின் வரலாற்றை எழுதிய நாயகன் மறைந்திருப் பது ஈடுசெய்ய முடியாத இழப்பா கும். இந்திய கம்யூனிச இயக்கத் திற்கும், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப் பாகும். அவர் எழுதிய ‘மார்க்ஸ்-அம்பேத்கர்-பெரியார்’ குறித்த புத்தகம் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இடம்பெறக் கூடிய அளவிற்கு தகுதியான புத்தகம். தோழர் என்.ராம கிருஷ்ணன் மறைந்திருக்கலாம்.ஆனால் அவரது எழுத்துக்கள், படைப்புகளுக்கு ஒருபோதும் மரணம் கிடையாது.  இந்திய கம்யூனிச இயக்க நட்சத்திரங்க ளின் நட்சத்திரமாக தோழர் என். ராமகிருஷ்ணன் எப்போதும் ஒளிர்ந்துகொண்டிருப்பார். இவ்வாறு அவர் பேசினார். தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் பேசுகையில், தோழர் என்.ராமகிருஷ்ணன் அவர்கள் பெருமளவிலான நேரத்தை படிப்பதற்கும் எழுது வதற்கும் செலவழித்தவர். கடந்த கால வரலாறுகளை புத்தகங்கள் மூலம் அடுத்த தலைமுறைக்கு கொண்டுசென்றார். அவரது வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது.வாழ்நாளில் கடைசி வரை எழுதிக்கொண்டி ருந்தார். பாசிச அபாயம் குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக்கொண்டி ருந்தார். கம்யூனிஸ்ட் இயக்கத் தின் தகவல் களஞ்சியம் அவர். தோழர் என்.ராமகிருஷ்ணன் விட்டுச்சென்ற பணிகளை நாம் முன்னெடுப்போம் என்றார். இரங்கல் கூட்டத்தில் தீக்க திர் முன்னாள் ஆசிரியர் வி.பர மேசுவரன்,  கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் விவசாயத்தொழிலாளர் சங்கத் தின் மாநிலத் தலைவருமான ஏ. லாசர், ஜனநாயக மாதர் சங்கத் தின் மாநிலச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முருகன், மதிமுக தொழிற்சங்க நிர்வாகி மகபூப்ஜான் உள் ளிட்டோர் பேசினர்.

;