districts

img

சிபிஎம் தேனி போக்குவரத்து இடைக்கமிட்டி செயலாளராக ஜி.கணேஷ்ராம் தேர்வு

தேனி, டிச.10- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேனி போக்குவரத்து இடைக் கமிட்டியின் 8 ஆவது மாநாடு போடியில் தோழர் எஸ்.மன் னார்சாமி நினைவு அரங்கத் தில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு ஜி.மணி கண்டன், எஸ்.முருகன் ஆகி யோர் தலைமை வகித்தனர். கட்சிக் கொடியை டி.சுப்பு ராஜ் ஏற்றி வைத்தார்.  ஜி. கணேஷ்குமார் வரவேற்றுப் பேசினார். அஞ்சலி தீர்மா னத்தை சதீஷ்குமார் வாசித் தார். மாநாட்டினை மாவட்ட செயலாளர் டி.வெங்கடேசன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் வாழ்த்தி பேசினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.முருகன் நிறைவுரையாற்றினார். மாநாட்டில், செயலாள ராக ஜி.கணேஷ்ராம் தேர்வு செய்யப்பட்டார். 7 பேர் கொண்ட இடைக்கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.  27 மாதம் காலம் கடந்த போக்குவரத்து தொழிலா ளர்களின் 14 வது ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் 23 மாத அகவிலைப்படி நிலு வையை வழங்க வேண்டும், ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்களை வழங்க வேண்டும், பிடித்தம் செய் யப்பட்ட வருங்கால வைப்பு நிதி, எல்ஐசி, பிஎல்ஐ ஆகிய வற்றை உரிய கணக்கில் வரவு வைக்க வேண்டும் என் பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;