குழித்துறை, டிச.19- ஒன்றிய அரசு மீன்பிடி வலைகளுக்கு விதித்துள்ள 12 சதவிகித ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்திடுக, பெரும் மழை மற்றும் புயல் எச்சரிக்கையால் மீன்பிடித் தொழிலை இழந்து நிற்கும் மக்கள் அனை வருக்கும் மழை நிவாரணம் வழங்குக உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்தூர் மீன்வளத்துறை அலுவலகம் முன் சனியன்று (டிச.19) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர். செல்லசுவாமி , சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் விஜயமோகன், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச் செயலா ளர் அந்தோணி, மாவட்ட தலைவர் அலெக்சாண்டர், நிர்வாகிகள் டிக்கர் தூஸ் ,மேரி தாசன், சகாய பாபு ஆகியோர் பேசினர். ஏராள மானோர் கலந்து கொண்டனர்.