மதுரை, ஜூலை 8- பல்கலைக்கழகங்களின் தன் னாட்சி உரிமையைப் பறிக்கும் வகை யில் மாநிலம் முழுவதும் ஒரே பாடத் திட்டம் என்ற செயல்திட்டத்தை தமி ழக அரசு அமல்படுத்த உள்ளதாக வும் இது தேசியக் கல்விக் கொள்கை யை அமல்படுத்த எடுக்கும் முயற்சி இம் முயற்சியைக் கைவிட வேண்டு மென வலியுறுத்தி கல்லூரி ஆசிரி யர்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மதுரையில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது. இந்த உண்ணா மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா மற்றும் அழகப்பா பல்கலைக்கழகக் கல்லூரி ஆசி ரியர்கள், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்ட மைப்பான கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர். போராட்டத் திற்கு இ.பி.ஞானேஸ்வரன், மூட்டா மண்டலத் தலைவர் ரமேஷ்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கி ணைப்பாளர் மு.நாகராஜன், மூட்டா தலைவர் ஏ.டி.செந்தாமரைக்கண் ணன் உட்பட ஏராளமானோர் பங் கேற்றனர்.
உண்ணாவிரதத்தின் நோக்கம்
அகில இந்திய அளவில் உயர் கல்வியில் தமிழ்நாடு மிகச்சிறந்த இடத்தில் உள்ளது. அதற்குக் கார ணம் தமிழக அரசின் கல்விக் கொள் கைகள், கல்வியாளர்களின் ஆலோச னைகள், தனித்த பாடத் திட்டங்கள், ஜனநாயக முறைப்படி செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் ஆகியவை முக்கி யக் காரணங்கள். இந்தச் சூழலில், தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் கல்வி யாளர்களை, ஆசிரியர் சங்கங்களை கலந்தாலோசிக்காமல் மாநிலம் முழு வதும் ஒரே பாடத் திட்டத்தை அறி முகப்படுத்த உள்ளது. இது பல்க லைக்கழகங்களின் தன்னாட்சி உரி மையைப் பறிப்பதோடு தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த எடுக்கும் முயற்சியாகும். மாநிலம் முழுவதும் ஒரே பாடத் திட்டம் குறித்து அரசு, கல்வியா ளர்கள், கல்வியியல் வல்லுநர்கள், பேராசிரியர்கள், சங்கங்கள் ஆகிய வற்றை கலந்து ஆலோசிக்க வேண் டும். ஒரே பாடத்திட்டத்தில் அறிவியல் சார்ந்த பாடங்கள் மிகவும் தரம் குறைந்ததாக உள்ளது. தமிழக அரசு மாநிலம் முழுவதும் ஒரே பாடத்திட் டம் என்பதைத் திரும்பப்பெற வேண்டும். குறிப்பாக கணிதம், விலங்கியல், கணிப்பொறி அறிவியல், பொருளி யல், வணிகவியல் போன்ற துறை களுக்குத் துணைப்பாடங்களாக இருந்து வருகிற இயற்பியல், தாவர வியல், வணிகவியல் மற்றும் பொரு ளியல் போன்ற துணைப்பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. தவிர பல புதிய மாற்றங்கள் குழப்பங்களையும், எதிர் மறை தாக்கத்தையும் ஏற்படுத்தி யுள்ளன. அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டும் பணி மேம்பாடு பணப்பயன், நிலுவைத் தொகை வழங்கப்படாதது, தனி யார் உதவிபெறும் கல்வி ஆசிரி யர்களுக்கான பணி மேம்பாடு, முனைவர், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.