districts

img

கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகள் சாலையில் நெல்லை குவித்து, டிராக்டர்களுடன் விவசாயிகள் மறியல்

மதுரை, டிச.11- மதுரை மாவட்டம் சோழவந் தான் அருகே ஊத்துக்குளியில் அரசு நெல் கொள்முதல் நிலை யத்தில் அதிகாரிகள், விவசாயி களின் நெல்லை கொள்முதல் முதல் செய்ய மறுப்பதாகக் கூறி சோழவந்தான் பகுதி விவசாயி கள் சாலையில் நெல்லை குவித்து டிராக்டர்களுடன் சாலை மறிய லில் ஈடுபட்டனர்.   ஊத்துகுளியில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கூடு தலாக கமிசன் கேட்கும் கூட்டுறவு துறையினரும் அதிகாரிகளும் விவசாயிகளின் நெல்லை கொள் முதல் செய்ய மறுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த விவ சாயிகள், சோழவந்தான் சாலை யில் நெல்லை குவித்து டிராக் டர்களுடன் சாலைமறியலில் ஈடு பட்டனர். சோழவந்தான் தென் கரை கூட்டுறவு வங்கி செயலா ளர் செல்வம், மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கொள்முதல் செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

;