districts

img

வனப்பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்லவிடாமல் வழிபாட்டு உரிமையை பறிப்பதா?

விருதுநகர், ஆக.27- விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு செல்ல விடாமல் வனத்துறையினர் வழிபாட்டு உரிமையை பறிக்கின்றனர் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்  தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வரு வாய் அலுவலர் ரவிகுமார், வேளாண்மை இணை இயக்குநர் பத்மாவதி, நேர்முக உதவியாளர் நாச்சியார்அம்மாள் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன் கூறுகையில், ‘‘சதுரகிரி மலை, செண்பக தோப்பு, சாஸ்தா கோவில் வழிபாட்டு ஸ்தலங்களுக்கு பக்தர்களைச் செல்லவிடா மல் வனத்துறையால் வழிபாட்டு உரிமை கள் மறுக்கப்படுகிறது.  ஏதாவது காரணம் சொல்லி வழிபாட்டுக்கு தடை ஏற்படுத்துகின்றனர். சதுரகிரி பாதையில் மூவாயிரம் கையூட்டு பெற்றுக் கொண்டு கடை நடத்த அனுமதி வழங்கியுள்ளனர். மலைவாழ் மக்கள் வியா பாரம் செய்ய அனுமதிக்கவில்லை. அவர்  களின் பொருட்களை உடைத்து சேதப் படுத்தியுள்ளனர்’’ என தெரிவித்தார்.  

அதற்கு பதிலளித்த வனத்துறை அதி காரி, ஆடுகள் உள்ளிட்டவைகளை பலி யிட்டு சாமி கும்பிடும் போது வன விலங்கு கள் வந்து மக்களை தாக்கிட வாய்ப்பு  உண்டு. எனவே, அனுமதி மறுக்கப்படு கிறது என தெரிவித்தார். மேலும் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தில் தரப்படும் மண்மட்டி, கடப்பாறை, தட்டு உள்ளிட்ட கருவிகள் வழங்கிட முன்பு ரூ.900 மட்டுமே பெறப் பட்டது. தற்போது விவசாயிகளிடம் ரூ.1500 பெறப்படுகிறது. அதிலும் தரமற்ற கருவிகள் வழங்கப்படுகின்றன. பவர் டில்லர், ரெட்டவேட்டர் போன்ற வேளாண் இயந்திரங்கள் வழங்குவதில்லை எனவும் அ.விஜயமுருகன் புகார் தெரிவித்தார்.  அதற்கு பதிலளித்த வேளாண் அதி காரி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இயந்திரங்கள் வழங்க பரிந்துரை செய் யப்படும் என்றார். மாவட்டத்தில் கொப்பரைத் தேங்காய்  உற்பத்திக்கான உலர்த்திகள், தேங்காய்  வெட்டும் கருவிகள் அதிகம் தேவைப்படு கிறது என தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில ளித்த ஆட்சியர், கூடுதல் கருவிகள் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.