விருதுநகர், நவ.30- தவறான சர்வே எண்களை காண்பித் தும் வேறு பகுதியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி அச்சம்தவிழ்த்தான் பகுதி யில் பொது மக்களை, விவசாயத்தை பாதிக்கும் வகையில் கல்குவாரி அமைப் பதை தடுத்து நிறுத்த வேண்டும் என குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேக நாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.ரவி குமார் மற்றும் வேளாண்மைத்துறை அதி காரிகள் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற விவாதம் வரு மாறு:
திருவில்லிபுத்தூர் அருகே அச்சம் தவிழ்த்தான் கிராமத்தைச் சேர்ந்த இரு வர் 30 ஏக்கர் நிலத்தை கிரையம் பெற்றுள்ள னர். மேலும் தனி நபருக்கு சொந்தமான 11.75 ஏக்கர் மற்றும் அரசு புறம்போக்கு நிலம் 6.96 ஏக்கர் நிலத்தை சுற்றி முள் வேலி அமைத்துள்ளனர். பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அங்கு கல்குவாரி அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்ற னர். இப்பகுதியில் கிணறு மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. பட்டா நிலங்களும், மேய்ச்சல் நிலங்களும் உள்ளன. கல்குவாரி அமைக்க வேறு ஊரில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, இங்கு கல்குவாரி அமைக்க ஏற்பாடு செய்கின்றனர். மேலும், சர்வே எண்களை மாற்றியும் உள்ளனர். எனவே, இந்த கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த ஆட்சியர், உடனடி யாக கோட்டாட்சியர் தலைமையில் குழு வை அனுப்பி ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தார். இராஜபாளையம் அருகே தேவதா னத்தில் சவுடு மண் அள்ள அனுமதி வழங் கப்பட்டது. அதில் விதிமுறைகளை மீறி பல கோடி ரூபாய்க்கு மண் அள்ளி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது குறித்து புகார் தெரி வித்தோம். இதையடுத்து,ஆர்.டி.ஓ தலை மையில் குழு அமைத்து விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடைபெற்றதா? இல்லையா? என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் வி.முருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆட்சியர், ஓரிரு நாட்களில் குழுவின் விசாரணை பற்றி பதி லளிக்கப்படும் என தெரிவித்தார்.
தரமற்ற விதைகள் விற்பனை
பட்டம்புதூர் பகுதியில் விதைக்கப் பட்ட குதிரைவாலி பயிர்கள் விளைய வில்லை. எனவே, அந்த விதைகளை ஆய்வு செய்ய வேண்டும். தரமற்ற விதைகளை விற்பனை செய்த நிறுவனம் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஆட்சியர் உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்றனார். இருக்கன்குடி, நெமேனி பகுதியில் உள்ள வைப்பாற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, குவாரியை அகற்ற வேண்டும் என அப்பகு தியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் புகார் தெரிவித்தார். இதையடுத்து பேசிய ஆட்சியர், மணல் குவாரிகளால் அரசுக்கு வருவாய் வருகி றது. எனவே, அதை நாம் மூட முடியாது என தெரிவித்தார். பின்பு, பேசிய விவசாயி ஒருவர், வைப் பாறு நீண்ட தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. ஆனால், இடையில் ஏராளமான முட்புதர்கள் ஆக்கி ரமித்துள்ளன. எனவே, அவற்றை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.