districts

மதுரை முக்கிய செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

கடமலைக்குண்டு, ஜுன் 11- தேனி மாவட்டம், மயிலாடும் பாறை அருகே அரண்மனைபுதூர் கிரா மத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது  36). விவசாயி. இவரது மனைவி அபி நயா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே குடும்ப  பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்  பட்டு வந்துள்ளது. கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறின் போது  அபிநயா கணவரின் வீட்டை விட்டு வெளியேறி கூடலூரில் உள்ள அவ ரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.  ஈஸ்வரன் பலமுறை நேரில் சென்று  வலியுறுத்தியும் அபிநயா சமாதானம் அடையவில்லை. இதனால் மன வருத்தத்தில் காணப்பட்ட ஈஸ்வரன் செவ்வாய்க்கிழமையன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மயிலாடும்பாறை போலீசார் அரண்மனைபுதூர் கிரா மத்திற்கு சென்று ஈஸ்வரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் பள்ளி  வேன் கவிழ்ந்து மாணவன் பலி 

சிவகங்கை ஜுலை 11- சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூ ரில் உள்ளது  சார்லஸ் மெட்ரிக் பள்ளி.  முளக்குளம் கிராமம் அருகே சருக னேந்தல் என்ற இடத்தில் இப்பள்ளி யின் வாகனம் கவிழ்ந்து விபத்துக்  குள்ளானது. இதில் ஹரிவேலன் என்கிற 7 ஆம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்தி லேயே பலியானான்.  20-க்கும் மேற்  பட்ட பள்ளி குழந்தைகள் காயமடைந்த னர். கிராம மக்கள் உதவியுடன் அவர்  களை மீட்டு சிவகங்கை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கின்றது. இந்த.விபத்து குறித்து காவல்  துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரித்து வரு கின்றனர்.