districts

img

5 ஆம் வகுப்பு வரை தாய்மொழி வழிக் கல்வியே மாணவர்களுக்கு வழங்க வேண்டும்

திண்டுக்கல், செப்.14 5 ஆம் வகுப்பு  வரை அரசு பள்ளிகளில் மாணவ,  மாணவியர்களுக்கு தாய் மொழி வழிக்கல்வியே வழங்க வேண்டும் என்று திண்டுக்கல் லில் நடைபெற்ற அரசின் கல்வி கொள்கை தொடர் பான கருத்து கேட்புக் கூட்டத் தில் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  இது தொடர்பாக சங்கத் தின் மாவட்டச்செயலாளர் கே.முகேஷ்  கொடுத்த மனு வில் கூறியிருப்பதாவது: ஓராசிரியர் பள்ளி மற்றும் ஈராசிரியர் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்க வேண்டும்.  பாட புத்தக சுமையை குறைக்க வேண்டும். பாடங்களையும் குறைக்க வேண்டும். உதா ரணமாக, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் கண க்கு, சமூக அறிவியல் பாடங் கள் மிக அதிகமாக உள்ளன பிற வகுப்புகளுக்கும்  ஆய்வு செய்து பாடங்களை குறைக்க வேண்டும்.                         மேல்நிலைப் பள்ளிக ளில் பொதுத் தேர்வு வகுப் பான பத்தாம் வகுப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத் துவம் 6,7,8 வகுப்பு மாண வர்களுக்கு தரப்படாததால் தரமான கல்வி, கிடைப்ப தில்லை.இந்த நிலை மாற வழிவகை செய்ய வேண் டும்.         மேல்நிலைப் பள்ளிக ளில் மாணவர் எண்ணிக்கை 2 ஆயிரம்,  3 ஆயிரம் என இல்லாமல் 750, 800 என்ற அளவிற்குள் குறைக்க வேண்டும். பள்ளிகளால் அதிக எண்ணிக்கையில் உள்ள மாணவர்களை கவ னிப்பது இயலாத நிலையாக உள்ளது.  வளரிளம் பரு வக் குழந்தைகளை கையாள் வது சவாலாக இருப்பதால் ஒவ்வொரு பள்ளிக்கும் உள நல ஆலோசகர் கண்டிப்பாக நியமிக்க வேண்டும்.   தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என அனைத்து வகை யான பள்ளிகளுக்கும் விளையாட்டு மைதானம் கட்டாயம் தேவை அதே போல விளையாட்டு ஆசிரி யர்கள் நியமனமும் தேவை.     மழலையர் வகுப்புகள், தொடக்கப்பள்ளி, நடு நிலைப் பள்ளிகளில் அவசி யம் வேண்டும்.      

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்க ளுக்கும் நூலக வாசிப்பை பழக்கப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி,கற்றல் குறைபாடு உள்ள குழந்தை களுக்கு தனியாக குறைக் கப்பட்ட பாடத்திட்டம் உள்ள புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்.   ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிவழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். அடிப்படை மொ ழித்திறன்களை வளர்ப்ப தற்கு கூடுதல் முன்னுரிமை அளிக்க வேண்டும். அனை த்து பள்ளிகளுக்கும் இணைய வசதி வழங் கப்பட வேண்டும்.               குறைந்த பட்சம் பள்ளிக்கு ஒரு திறன் வகுப்பறை உரு வாக்கப்பட வேண்டும்.   பள்ளி தோறும் கணினி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.               படக்கதை புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். ஆண்டுதோறும் கலை இலக் கிய போட்டிகள் நடத்தப்பட வேண்டும். பள்ளி வளாகங்க ளை ஒன்றிணைப்பதை தவிர்த்து அருகாமை பள்ளி முறைமையை அதிகப் படுத்த வேண்டும்.  பள்ளிக் கல்வி இடைநிற்றல், குழந்தை திருமணம் மற்றும்    குழந்தை தொழிலாளர்கள் முறையை தடுத்து நிறுத்த வேண்டும் . இவ்வாறு மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது. (நநி)

;