districts

மதுரை முக்கிய செய்திகள்

மின் ஊழியர் ஓய்வு பெற்றோர் மாநாடு

சிவகங்கை, ஜூலை 10- மின்வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது தமிழ்நாடு மின்வாரிய ஒய்வு பெற்றோர் நல அமைப்பின் சிவகங்கை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. மாநாட்டை மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் உமா நாத் துவக்கி வைத்தார். கருனாநிதி, செல்ல முத்து, கோவிந்தராஜன், ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தேர்தல் வாக்குறு திப்படி திமுக அரசு 70வயதானவர்களுக்கு ஒய்வூதியத்தை பத்து சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். பழைய பென்சன் திட் டத்தை அமல்படுத்த வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் மாவட்டத் தலைவ ராக போஸ், மாவட்டச் செயலாளராக விநா யகமூர்த்தி, மாவட்டப் பொருளாளராக சுரேஷ்குமார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர்.

வன்கொடுமையால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம்

விருதுநகர், ஜூலை 10- விருதுநகரில்   மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில், இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவா ரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித் தொகை,  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை  மனுக்களை ஆட்சியர் பெற்றுக் கொண் டார்.   காரியாபட்டி தாலுகா, வெற்றிலை முரு கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொ.மாய கிருஷ்ணன் என்பவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது வாரிசுதாரர்களான அழகம்மாள், ராம மூர்த்தி மற்றும்  கற்பகவள்ளி ஆகியோ ருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.6  லட்சம் நிவாரணத் தொகைக்கான  காசோ லைகளை ஆட்சியர் வழங்கினார். குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர்  ரவிகுமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி)  அனிதா, மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (நிலம்)  முத்துக்  கழுவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் கருப்புப் பட்டை போராட்டம்

சிவகங்கை, ஜூலை 10- காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்கத்தினர் கருப்புப் பட்டை அணிந்து போராட் டம் நடத்தினர்.  சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, கல்லல், காளை யார்கோவில், திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர், கண்ணங்குடி, சாக்கோட்டை வட்டாரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், காலிப் பணியிடங்  களை நிரப்ப வேண்டும். குழந்தைகள் குறைவாக இருக்கும்  மையங்களை அருகில் இருக்கும் மையங்களோடு இணைக்கக் கூடாது. ஐந்து ஆண்டுகள் பணி முடித்த மினி  அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பதவி உயர்வு வழங்க வேண்டும்.    பத்தாண்டு பணி முடித்த அங்கன்வாடி உதவி யாளர்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தினர். 

பேருந்து படியில் தொங்கிச் செல்லும் மாணவர்கள் 

கடமலைக்குண்டு, ஜுலை 10- கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை கிரா மத்தில் இருந்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்காக மட்டும் கடமலைக்குண்டு, துரைச்சாமிபுரம், லட்சுமிபுரம் வழியாக வீரபாண்டி அருகே உள்ள தப்புக்குண்டு அரசுக்  கல்லூரிக்கு அரசு நகர்ப் பேருந்து இயக்கப்பட்டு வரு கிறது.  இந்தாண்டு கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை பகுதி களிலிருந்து 50-க்கும் மேற்பட்டோர் புதிதாக கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதனால் மயிலாடும்பாறையில் பேருந்து புறப்படும் போதே நிரம்பிவிடுகிறது. தொடர்ந்து கடம லைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த  40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பேருந்தில் ஏறுகின்றனர். இதனால் கடமலைக்குண்டு கிராமத்தை கடக்கும் போதே மாண வர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்கின்றனர். தொடர்ந்து துரைச்சாமிபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட ஏரா ளமான கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களும் இந்தப் பேருந்தையே நம்பியுள்ளனர். கிராமப்புற மாணவ-மாணவிகள் நலன் கருதி காலை  மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக அரசு நகர்ப்பேருந்து இயக்க வேண்டும். அல்லது மாணவர்கள்- மாணவிகளுக்கு  தனியாக பேருந்து இயக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்து நிறுத்தம், சாலை வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு

இராமநாதபுரம், ஜூலை 10- இராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்கு மீனவ கிராமத்தில் பேருந்து நிறுத்தம் மற்றும் சாலை வசதிகள் செய்து தரக்கோரி சிஐடியு கடற்  தொழிலாளர் மீனவ சங்கம் சார்பில் கிராமமக்கள்  மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த னர். இராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக் குடி பாண்டிகோவில் பகுதியில் பேருந்து நிறுத்  தம் மற்றும் சாலை வசதிகள் செய்து தரக்கோரி  கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் திங்கட் கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு  அளித்தனர்.  கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி தலைமை வகித்தார். திருப்பாலைக்குடி கடல் தொழிலாளர் சங்க கிளைச் செயலாளர் அஞ்சாமணி, கிளைத் தலைவர் வீரபாண்டி, பொருளாளர் பன்னீர்செல்வம், ஹரிகரபாண்டியன், கலைவாணண், பாலமுருகன் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் படுகாயம்

தேனி, ஜூலை 10- தேனி நகரில் பேனர் வைக்கச் சென்ற வாலி பர் மீது மின்சாரம் பாய்ந்து தேனி அரசு மருத்து வக்கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்  பட்டுள்ளார் . தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (30). இவர் திங்களன்று  மதியம் தேனி நேரு சிலை முன்பு அகாதெமி நிறுவனம் ஒன்றிற்கு விளம்பர பேனர் வைக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த  மின்சாரம் பாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம்  தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் . அங்கு தீவிர சிகிச்சைச் பிரிவில்  சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை அருகே பாம்பு கடித்து சிறுவன் பலி

மதுரை, ஜூலை 10- மதுரை பாலமேடு அருகே உள்ள வி.புதூர்  பகுதியைச் சேர்ந்த ராசுக்காளை- மணி மேகலை தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள்,  ஒரு ஆண் குழந்தை உள்ளது. ராசுக்காளை காலமாகிவிட்ட நிலையில் மணி மேகலை தனியார்  ஆலையில் தினக் கூலியாக  பணியாற்றி வருகிறார்.   இவரது மகன் பாலமுரு கனை (8) ஞாயிறன்று இரவு பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு  பாலமேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த  மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.

பட்டா வழங்க மறுப்பு: முதியவர் தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல், ஜுலை 10- நீண்ட நாட்களாக பட்டா வழங்க  மறுத்த வருவாய்த்துறை அதிகாரி யைக் கண்டித்து திண்டுக்கல்லில் முதி யவர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அரிய நல்லூர் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் ( 65). இவர்  தான் இருக்  கும் இடத்திற்கு நீண்ட நாட்களாக பட்டா கேட்டு வருவாய்த் துறையினர் பட்டா தர மறுத்து அலைக்கழிப்பதாக கூறி மண்ணெண்ணெய்யை உட லில் ஊற்றி ஆட்சியரகத்தில் தீக்  குளிக்க முயன்றார். அவரை காவல் துறையினர் மீட்டனர்.  மற்றொரு சம்பவம் பழைய வத்தலகுண்டு பகுதியைச்  சேர்ந்த பாண்டி மனைவி தனலட்சுமி.    இவர்களுடைய  பேத்தி  திவ்யா (16).  கடந்த  ஆறு மாதங்களுக்கு முன்பாகக்  காணாமல் போய்விட்டார்.  இது குறித்து  வத்தலகுண்டு காவல்  நிலையத்தில் புகார் கொடுத்து புகா ரின் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்  கப்படவில்லை  என்று கூறி  தனலட்சுமி,  ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்  ணெண்யை ஊற்றி தீக்குளிக்க முயற்  சித்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்  தனலட்சுமியை மீட்டனர்.

இராமேஸ்வரம் மீனவர்கள்  வேலை நிறுத்தம் 

இராமேஸ்வரம், ஜூலை 10-  இலங்கைக் கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டுள்ள 15 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் திங்களன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேருடன் இரண்டு விசைப்படகு களை விடுவிக்க ஒன்றிய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்கட்கிழமை  மீனவர்கள் வேலை நிறுத்  தம்  செய்தனர். இதன் காரணமாக துறைமுகத்தில் 750 க்கும்  மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டது. 5 ஆயிரத்திற் கும்  மேற்பட்டோர்  வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். 

மதுரை: விபத்து இருவர் பலி 

மதுரை, ஜூலை 11-  தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள முத்து கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜா (40). இவரது  தலைமையில் கோயம்புத்தூரில் ஆன்லைன் விளம்பர கருத்தரங்கம்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றுவிட்டு செங்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி ஜெயஸ்ரீ (50), சுவைதீர்த்தபுரத்தைச் சேர்ந்த செந்தில் இசக்கி (28), வீரகேளரபுரம்புதூரைச் சேர்ந்த  கிருஷ்ணன் (38) ஆகியோர்  காரில் சொந்த ஊருக்கு வந்துகொண்டி ருந்தனர். காரை கடையநல்லூரைச் சேர்ந்த வைரமுத்து ஓட்டி வந்தார்.  இவர்களது கார் திங்கள்  அதிகாலை 1.30 மணியளவில் சரக்கு வேனை முந்த முயன்றபோது  முன்னால் சென்ற வேனின் பக்கவாட்டுப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த  ஜெயஸ்ரீ, சண்முகராஜா ஆகியோர் உயிரிழந்தனர்.