சென்னை, டிச. 17- வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: வடகிழக்கு பருவ காற்றின் காரண மாக சனிக்கிழமை (டிச. 18) தென் கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஞாயிற்றுக்கிழமை (டிச. 19) வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.