districts

img

கடமலை-மயிலை ஒன்றியக்குழு துணைத் தலைவராக திமுக கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு

 கடமலைக்குண்டு, செப்.23- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியக்குழு துணைத்தலைவருக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை மதியம் மயிலாடும்பாறை யூனியன் அலுவலகத்தில் நடை பெற்றது. ஒன்றியக்குழு தலைவர் சித்ரா சுரேஷ் உட்பட தி.மு.க வை சேர்ந்த 11 கவுன்சிலர்களும், அதிமுகவை சேர்ந்த 1 கவுன்சிலரும்  கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் திமுக 3 ஆவது வார்டு கவுன்சிலர் சேகரன் ஒன்றியக்குழு துணைத்தலை வர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார்.இவரை எதிர்த்து மற்றவர்கள் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால் சேகரன் ஒரு மனதாக தேர்வு செய்யப் பட்டதாக தேர்தல் அதிகாரி தாமரைக்கண்ணன் அறி வித்தார்.  இதையடுத்து ஒன்றியக்குழு துணைத் தலைவ ராக தேர்வு செய்யப்பட்ட சேகரனுக்கு ஒன்றிய  ஆணையர் கள் திருப்பதி முத்து, ஐயப்பன், தி.மு.க ஒன்றிய கழக செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கப்பாண்டி மற்றும் கவுன் சிலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். துணைத் தலைவர் தேர்தலை முன்னிட்டு கடமலைக்குண்டு,  மயிலாடும் பாறை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

;