தேனி, மே 31- தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக்குழுத் தலைவர் தி.வேல்முருகன், குழு உறுப்பி னர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். சின்னமனூர் வாழை சிப்பம் கட்டும் நிலை யம், குச்சனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில், பெரிய குளம் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள பழமை வாய்ந்த மாவட்ட முன்சீப் நீதிமன்றக் கட்டடம், தேவதானப்பட்டியில் கட்டப்பட்டுள்ள காவலர்கள் குடியிருப்புகள், வைகை அணை யின் சுற்றுலா பணிகள் மற்றும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள ஓமியோபதி பிரிவு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் தொடர்பாக புதன்கிழமை தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதி மொழிக் குழுத்தலைவர் தி.வேல்முருகன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீ வனா, சட்டமன்ற உறுப்பினர்களான ஆர்.அருள்,ஐ.கருணாநிதி எம்.சக்கரபாணி, ரூபி ஆர்.மனோகரன், எம்.கே.மோகன், பி.ராம லிங்கம், எஸ்.ஜெயக்குமார் சட்டப்பேரவை செயலாளர் கே.சீனிவாசன் ஆகியோர் முன்னி லையில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது, ஆண்டிபட்டி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன், பெரிய குளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவ ணக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ஜெயபாரதி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மரு. அழ. மீனாட்சிசுந்தரம் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.