இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் சத்திரப்பட்டி மின் வாரியத்தில் லஞ்ச ஊழலைக் கண்டித்து சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஒன்றியச் செயலாளர் முனியாண்டி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜீவானந்தம், கு.சக்திவேல், பி.பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.