மதுரை/தேனி, டிச.12- புரட்சியாளர் அம்பேத் கர் படத்திற்கு காவி சாயம் பூசி, குங்குமம், திருநீறு அணிந்து அவமதிப்பு செய்த சங்பரிவார் கும்பல்களை கண்டித்து விடுதலை சிறுத் தைகள் கட்சி சார்பில் தேனி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம், மேற்கு மாவட்டச் செயலா ளர் சுருளி, செய்தித் தொடர் பாளர் அன்புவடிவேல், தேனி நாடாளுமன்ற தொகுதி செய லாளர் இரா.தமிழ்வாணன், தேனி நகர் செயலாளர் ஈஸ்வ ரன், க.தமிழன், கோமதி, ஆனந்தராஜ், ச.பாரதி, சு.சி. தமிழ்ப்பாண்டியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் திரு வள்ளுவர், டாக்டர் அம்பேத் கர், பெரியார், அண்ணா சிலைகள் மீது காவி சாயம் பூசி சனாதான கொள்கைக்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகை யில் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி, இந்து மக் கள் கட்சியின் அர்ஜுன் சம் பத் அமைப்புகள் செயல்படு வதைக் கண்டித்து மதுரை யில் விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் மாவட்டச் செய லாளர் கதிரவன் தலைமை யில் திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்குலாப், செல்வ அரசு, சசி, பூமிநாதன் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.