districts

img

கொண்டனேரியில் வீடுகள் இடிப்பு சிபிஎம் தலையீட்டால் மாற்று வீடுகள் ஒதுக்குவதாக வட்டாட்சியர் உறுதி

இராஜபாளையம், ஜுன் 22- இராஜபாளையம் கொண்டனேரி கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் மிகப் பெரிய திருமண மண்டபங்களும் கோவில்களும், வேறு சில கட்ட டங்களும் உள்ளன. ஆனால் எளிய மக்கள்  குடியிருக்கக்கூடிய 17 வீடுகளை மட்டும் பொதுப்பணித்துறை நிர்வாகமும் வரு வாய்த் துறையும் குறிவைத்து இடித்துள் ளது. இந்த செயல் அப்பகுதி மக்கள் மத்தி யில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.  வீடுகள் இடிக்கப்பட்ட இடத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருது நகர் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என். தேவா, நகரச் செயலாளர் மாரியப்பன் மற்றும் நகர்க்குழு உறுப்பினர்கள் ஆகி யோர் வந்தனர். வீடுகளை இழந்த 17 பேருக்கும் மாற்று  இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை யை அதிகாரிகளிடம் சிபிஎம் தலைவர்கள் முன்வைத்தனர்.  பின்னர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் 17 பேருக்  கும் குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கித்தருவதாக வட்டாட்சியர் உறுதி யளித்தார்.  வீடுகளை இடிப்பதை தடுத்தவர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.அவர் களை மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.