districts

மதுரை முக்கிய செய்திகள்

ஒலிபெருக்கி உரிமையாளருக்கு இந்து முன்னணி நிர்வாகி கொலை மிரட்டல்  கூடலூர் போலீசார் வழக்கு பதிவு 

தேனி, செப்.20- விநாயகர் சதுர்த்தி நாளில் ஒலிபெருக்கி வைத்ததற்கு பணம் கேட்ட உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி செயலாளர் மீது கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் . தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்த ஒலிபெருக்கி உரிமையாளர் சேகர் மகன் பிரபு (39).கூடலூர் இந்துமுன்னணி அமைப்பாளர் ஜெகன் என்பவர் இவரை அணுகி விநாயகர் சதுர்த்தி நாளில் ஒலிபெருக்கி போடும் படி சொன்னதன் அடிப்படையில் ஒலிபெருக்கி அமைத்துள்ளார் .வாடகை பணம் கேட்டதற்கு ரூ. 7 ஆயிரம் மட்டும் கொடுத்து விட்டு, ஏமாற்றும் நோக்கில் தான் கொடுப்பதை மட்டும் வாங்கிக் கொள்ள வேண்டும், வேறு நிர்வாகிகளிடம் சொல்லக் கூடாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபு கூடலூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஜெகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கிறார்கள். 

குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான பயிற்சி

சிவகங்கை, செப்.20- பள்ளி மாணவர்களின் ஆய்வுக்கு உதவி செய்யும் வழி காட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சியானது திருப்பத்தூர் கல்வி மாவட்ட  ஆசிரியர்களுக்கு அரங்கத்தில் நடை பெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் சூசை மாணிக்கம் தலைமை வகித்தார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் சதீஷ், சிவகங்கை மாவட்ட கவுரவத் தலைவர் சாஸ்தா சுந்தரம் முன்னிலை வகித்தனர். கல்லூரியின்   விலங்கியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஆரோக்கிய ஜான்பால் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி அறி முகவுரையாற்றினார். அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட தலைவர் முனைவர் கோபிநாத் நோக்கவுரை யாற்றினார். தேசிய குழந்தைகள் அறிவியல்  மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ஆய்வு கட்டுரை குறித்து விளக்கமளித்தார். 

காந்திகிராம பல்கலை.யில் மாணவர் சேர்க்கை துவக்கம்

சின்னாளபட்டி,செப்.20- திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழ கத்தில் இளங்கலைப் பட்டப் படிப்புக்களுக்கான (CUET (UG) 2022)  மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது 2022-2023 கல்வியாண்டிற்கான (CUET (UG) 2022) நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்கள் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள இளங் கலைப் பட்டப் படிப்புகளில் சேர 26.09.2022 வரை இப்பல்கலைக்கழக இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு       www.rural univ.ac.in இணையதளத்தைப் பார்க்கவும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

வேடசந்தூர் அருகே குடிநீர் கேட்டு மக்கள் காலிக்குடங்களுடன் மறியல்

வேடசந்தூர், செப்.20- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள ஈ.சித்தூர் ஊராட்சி சித்தூர் காலனி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடிநீர் வழங்கும் மின்மோட்டார் பழுது ஏற்பட்டதால் அந்த மோட்டாரை பழுது நீக்க ஊராட்சி மன்ற நிர்வாகம் நடவ டிக்கை எடுக்காததால் கடந்த 10 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். செவ்வாயன்று காலை சித்தூர் காலனி பொது மக்கள் எரியோடு- வேடசந்தூர் சாலையில் தண்ணீர் பந்தம்பட்டிக்கு வந்து காலிக்குடங்களுடன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சம்பவ இடத்திற்கு எரியோடு போலீசார் விரைந்து வந்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மூலம் மின் மோட்டாரை  உடனடியாக பழுது நீக்கி சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி சமரசம் செய்தனர். பின்னர் மறியல் போராட்டத்தை பொது மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

போடியில் பிளேடால் கீறி முதியவர் தற்கொலை

 தேனி , செப்.20-  போடியில் பிளேடால் கீறி முதியவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், போடி கீழத்தெருவை சேர்ந்தவர் ராம்  (85). இவரது மனைவி இறந்துவிட்டார். மகள் மீனாட்சியின் பராமரிப்பில் இருந்து வந்தார். உடல் நிலை சரியில்லா மல் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிரமப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த ராம், பிளேடால் உடம்பில் கீறியதில் ரத்தம் வெளியேறியது. போடி அரசு மருத்துவமனையிலும், மேல்சிகிச்சைக் காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ராம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மீனாட்சி (42) கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாலை ஓரம் கிடந்த பணம் காவல்துறையிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலி, செப். 20- ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தை சேர்ந்த வர் கணேசன். இவர் ராதாபுரத்தில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார். திங்கட்கிழமை இரவு இவரது கடை யின் அருகே உள்ள சாலையில் ஒரு பணப்பை கிடந்தது. அதை பார்த்த கணேசன் பணத்தை எடுத்து கொண்டு ராதாபுரம் போலீஸ் நிலையம் சென்றார். அங்கிருந்த காவல் ஆய்வாளர்  வள்ளிநாயகத்திடம் அந்த பையை வழங்கினார். அதை பெற்று கொண்ட காவல் ஆய்வா ளர், மெக்கானிக்கின் நேர்மையை பாராட்டி பொன் னாடை அணிவித்து கவுரவித்தார்.

முறைகேடான பணி இடமாறுதல் உத்தரவை ரத்து செய்க!  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

தேனி ,செப்.20- தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மற்றும் தேனி ஒன்றியங்களில்  அரசாணைகளுக்கும் விதிகளுக்கும் புறம்பாக வேறு மாவட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இட  மாறுதல் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய  வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது . இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர், தொடக்க கல்வி இயக்குனர் உள்ளிட்டோருக்கு சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர் செல்லத்துரை அனுப்பிய கடிதம் வருமாறு: தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மற்றும் தேனி ஒன்றியங்களில் அரசாணைகளுக்கு புறம்பாக வேறு மாவட்ட ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்கப்பட்டு வரும் நிகழ்வானது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளித்துள்ளது. ஏற்கனவே கடந்த கலந்தாய்வில் உபரி ஆசிரியர்கள் என வேறு ஒன்றியங்களுக்கு பணிநிரவல் மூலம் மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தாய் ஒன்றியத்தில் காலிப்பணியிடம் ஏற்படும்போது முன்னுரிமை அடிப்படையில் மாறுதல் வழங்கப்படும் என கூறிவிட்டு தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களில் பணி நிரவல் மூலம் வேறு ஒன்றியங்களுக்கு சென்ற ஆசிரியர்க ளுக்கு மாறுதல் வழங்காமல் வேறு மாவட்ட ஆசிரி யர்களுக்கு விதிகளுக்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ள பணிமாறுதல்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தேனி மாவட்ட கிளை கேட்டுக்கொள்கிறது. விதிகளுக்கு புறம்பான மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்ய காலதாமதம் செய்யும் பட்சத்தில் தேனி மாவட்டத்தில் தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவில்லிபுத்தூர் அருகே செல்போன் டவர் மாயம் 

திருவில்லிபுத்தூர், செப்.20- சென்னையை சேர்ந்தவர் முத்து வேங்கட கிருஷ்ணன் (வயது 52). இவர் ஜி டி எஸ் என்னும் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இந்த நிறுவனம் கடந்த 16- 6- 2010 இல் ஏர்செல் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் செல்போன் டவர் அமைத்தது கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள விழிப்பனூர் சோலையப்பன் என்பவரது இடத்தில் இதே போல் ஒரு செல்போன் டவர் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் நஷ்டம் அடையவே அலைக்கற்றை சேவை நிறுத்தம் செய்யப்பட்டது அப்பொழுது கடந்த 10. 12. 2020 அன்று கண்காணிப்பு அதிகாரி முத்து வேங்கட கிருஷ்ணன் திருவில்லிபுத்தூர் அருகே சோலையப்பன் இடத்தில் அமைந்துள்ள செல்போன்  வரை ஆய்வு செய்ய பொறியாளர் ஜெகதீசனுடன்  அங்கு வந்தார். அப்போது செல்போன் டவர் பேட்டரி ஜெனரேட்டர் உட்பட ரூ. 27 லட்சத்து 44 ஆயிரத்து 912 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மாயமானது தெரிய வந்தது. இது குறித்து அவர் திருவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் 2 ல் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு  செய்ய உத்தரவிடுமாறு மனு கொடுத்தார். நீதிமன்றம் கிருஷ்ணன் கோவில் போலீசார் முத்து வேங்கட கிருஷ்ண னின் புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்து செல்போன் டவர் திருடர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.

பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு

விருதுநகர், செப்.20- விருதுநகர் அருகே காரிசேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை மர்ம நபர் திருடிச்சென்ற னர். காரிசேரியைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரது மகள் ஆனந்தலட்சுமி(24). பட்டாசு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டைப் பூட்டி விட்டு பாட்டி வீட்டிற்கு தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே  சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 ஜோடி வெள்ளிக் கொலுசு ஆகியவை  திருடு போனது தெரிய வந்தது. எனவே, இதுகுறித்த ஆனந்தலட்சுமி ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியை பாலியல் வன்கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை 

திருவில்லிபுத்தூர்,செப்.20-  சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி  8 வயது மாணவி பள்ளி  முடிந்து வீடு திரும்பினார். பின் மாலையில் வெளியில் சென்றவர் வீடு திரும்ப வில்லை.  இரவு முழுவதும் உறவினர்கள் தேடி பார்த்தும் சிறுமியை கிடைக்காததால் மாரனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் மறுநாள் காலை அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு  கிடந்தார்.  இதில் பேரநாயக்கன்பட்டியில் அரிசி பை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிய அசாம் மாநிலம் நல்பேரி மாவட்டத்தைச் சேர்ந்த மஜம்அலி(எ) மொஜாம்அலி (21) என்பவரை மாரனேரி போலீஸார் கைது செய்தனர்.  இந்த வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கில் குற்றவாளி மஜம்அலி வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பூர்ணஜெயஆனந்த்  தீர்ப்பளித்தார்.

போடியில் பள்ளி அருகே பாலம்,  வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

தேனி , செப்.20- போடியில் பெண்கள் பள்ளி அருகே வேகத்தடை, பாலம் அமைத்துத்தர வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ள னர். போடி நகராட்சி குலாலர் பாளையத்தில் அரசு உதவி பெறும் பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந் துள்ளது. இந்த பள்ளியின் 4 பக்கமும் சாலை அமைந் துள்ளது. பள்ளியின் மேற்கு பக்கம் அதிகமாக வாகனங் கள் சென்று வரும். இப்பகு தியில் அதிக வேகத்தில் வரும் வாகனங்களால் அடிக் கடி விபத்து ஏற்பட்டு வரு கிறது. இதனையடுத்து இப் பகுதி மக்கள் வேகத்தடை அமைத்துத் தர வேண்டும் என்று  போடி நகராட்சிக்கு கோரிக்கை மனு அளித்து மூன்று மாதங்களாகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதேபோல் பள்ளியின் பின்புறம் பொதுமக்கள் சென்று வரும் பாதையில் சாக்கடை பாலம் சேதம டைந்து காணப்படுகிறது. இதனை சரி செய்ய வலி யுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனி டையே பள்ளியின் மேற்கு தெருவில் அமைக்கப் பட்டிருந்த சாக்கடை பாலம்  தரமாக இருந்தும் அதனை அகற்றி புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். இதுகுறித்து அப்பகுதி யை சேர்ந்த வழக்கறி ஞர் ராஜபாண்டி என்பவர் கூறுகையில், போடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பகுதியில் வேகத் தடை அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதி காரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதே போல் பள்ளியின் பின்புற தெருவில் சாக்கடை பாலம் சேதமடைந்து பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வரு கின்றனர். இதனை சரி செய்ய மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அதே நேரத்தில் தரமான சாக்கடை பாலம் நல்ல நிலையில் உள்ளதை அகற்றிவிட்டு புதிய பாலம்  கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் நகராட்சி நிதி வீணடிக்கப் படுவதுடன் பொதுமக்களுக் கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுத்து வேகத் தடை, சாக்கடை பாலம் அமைக்க வேண்டும் என்றார்.

கண்டமனூர் அருகே கடப்பாரையால்  வீட்டின் கதவை உடைந்து கொள்ளை

கடமலைக்குண்டு, செப்.20- தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னகாமு. செவ்வாய்க்கிழமை காலை அன்னகாமு நடைபயிற்சி செல்வதற்காக வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தார்.  அப்போது வாசல் கதவின் முன்புறம் கடப்பாரையால் குத்தி சேதப்படுத்தப்பட்டி ருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சிய டைந்தார். இதுதொடர்பாக அவர் கண்ட மனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.  விரைந்து வந்த போலீசார் அன்னகாமுவின் வீட்டை பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து  கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.  மேலும் அவர் வீட்டின் அருகே துரைச்சாமி, வினோத்குமார்,பால்சாமி மற்றும் காமுத்தாய் ஆகிய 4 பேரின் வீடுகளிலும் கொள்ளை முயற்சி நடைபெற்றிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதில் காமுத்தாய் என்பவ ரின் வீட்டில் யாரும் இல்லை. இதை யடுத்து கொள்ளையர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று   25 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.  இதில் வினோத்குமார் என்பவரின் வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டிருந்தது. இதனையடுத்து அந்த கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நள்ளிரவு அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள்  இரண்டு பேர் முகத்தை துணியால் மூடியவாறு கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கடப்பாரையை கொண்டு வீட்டின் கதவை உடைக்க முயற்சி செய்த காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின்அடிப்படையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  இதற்கிடையே ஒரே நாளில் அடுத்த டுத்து 5 வீடுகளில் பலத்த ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் கண்டமனூர் கிராம பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிவகங்கையில் ஓய்வூதியர்கள் தர்ணா

சிவகங்கை,செப்.20- நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில்  சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாயிலில் தர்ணா நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் வடிவேலு தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்ட செயலாளர்   செல்லமுத்து கோரிக்கைகளைவிளக்கி பேசினார். நிர்வாகிகள் இராமகிருஷ்ணன், ஜீவானந்தம்,  கண்ணுச்சாமி ஆகியோர் பேசி னர். தோழமைச்சங்க நிர்வாகிகள் கோவிந்த ராஜ், சங்கரநாராயணன்,முத்துசாமி ஆகி யோர் ஆதரித்துப் பேசினர்.

;