மதுரை ரயில் பெட்டி தீவிபத்தில் காயமடைந்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், துணைமேயர் தி. நாகராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.ஜீவா, பி. கோபிநாத் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.