districts

தேசிய நெடுஞ்சாலையை செப்பனிடக்கோரி 3 மையங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

நாகர்கோவில், டிச.9- சிபிஎம் குமரி மாவட்ட செயற் குழு கூட்டம் கே.மாதவன் தலை மையில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. இராமகிருஷ்ணன், மாநில செயற் குழு உறுப்பினர் எஸ்.நூர்முக மது, மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தில் அண் மையில் தொடர்ந்து பெய்த கன மழையால் தேசிய நெடுஞ்சாலை கள் முழுமையாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக் கின்றன. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்ற னர். எனவே தேசிய நெடுஞ்சாலை களை உடனடியாக செப்பனிட வலியுறுத்தி டிசம்பர் 14 செவ் வாய் காலை 10 மணியளவில் நாகர்கோவில், தக்கலை, குழித் துறை ஆகிய 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியா குமரி மாவட்டக்குழு முடிவு செய் துள்ளது.  குமரி மாவட்டத்தில் சமீபத் தில் பெய்த கனமழையால் கடு மையான சேதம் ஏற்பட்டு பாதிக் கப்பட்ட மக்கள் அரசின் முகாம் களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் மக்கள் குடியிருப்புகள், விளைநிலங்கள், பயிர்கள் என அனைத்தும் சேதமடைந்துள் ளன. தொடர்ந்து ஆறு மாதங்க ளாக பெய்துவரும் கனமழை யால் வேலையின்றியும், வரு வாயின்றியும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர். இந்நிலையில் அரசின் சார் பில் எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் அனை வருக்கும் நிவாரணம் வழங்க கேட்டு 20.12.2021 முதல் 23.12. 2021 வரை பஞ்சாயத்து அளவில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. நகர்ப்புற உள் ளாட்சி மன்ற தேர்தலை நேரடி தேர்தலாக நடத்திட மாநில அரசை வலியுறுத்தியும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

;