districts

img

கடமலைக்குண்டு அருகே வெறிச்செயல் விஷம் கொடுத்து நாய்களை கொன்ற வனக்காவலர்

நடவடிக்கை கோரி சிபிஎம், விவசாயிகள் சங்கம் மனு தேனி, செப்.7- கடமலைக்குண்டு அருகே விஷம் கொடுத்து நாய்களை கொலை செய்த வனக்காவலர் மற்றும் உடந்  தையாக இருந்த வனச்சர கர் மீது மிருகவதை சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுக்  கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப் பட்டது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணாமலை,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. முருகன்,விவசாயிகள் சங்க  மாவட்ட தலைவர் எஸ்.கே. பாண்டியன், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் சந்தி ரன் ஆகியோர் தேனி ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

தேனி மாவட்டம், ஆண்  டிப்பட்டி வட்டம், க.மயிலா டும்பாறை ஒன்றியம் கிரா மம், மேகமலை ஊராட்  சிக்குட்பட்ட கோரையூத்து கிராமத்தில் 7 பேருக்கு சொந்  தமான 11 நாய்களை, மஞ்ச னூத்து சோதனைச் சாவடி யில் பணிபுரியும் வன காவ லர் செல்லத்துரை என்பவர் கோழிக் கறி உணவுடன் கொடிய விஷமுடைய திம் மட் என்கிற விஷ மருந்து கொடுத்து கொலை செய்  துள்ளார்.இதை அதே ஊரைச் சேர்ந்த ஆண்டித் தேவர் மகன் காசையா என்ப வர் நேரில் பார்த்துள்ளார்.இது குறித்து கிராம மக்கள் கடந்த 4 ஆம் தேதி மயிலா டும்பாறை காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர்.காவல்துறையினரும் நேரில் விசாரணை செய்து நாய்களை படமெடுத்து சென்றுள்ளனர்.இந்நிலை யில் மேகமலை வனச் சரகர், கோரையூத்து கிராமத் திற்கு சென்று புகாரை வாபஸ் வாங்க வைத்துள்  ளார். இதற்கு காவல் ஆய்வாளரும் உடந்தையாக இருந்துள்ளார். ஏற்கனவே பல நாய்கள் காணாமல் போன நிலையில் திட்டமிட்டு நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்த வன காவலர் செல்  லத்துரை மீதும் அதற்கு  உடந்தையாக செயல்பட்ட வர்கள் மீதும் மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரி வித்துள்ளனர்.

;