பழனி, டிச.26- மாடு ஒன்றுக்கு சுங்கக் கட்டணமாக ரூ.400, ஆட் டிற்கு ரூ.100, கோழி ஒன் றுக்கு ரூ.70 என அநியாய மாக நடைபெறும் வசூலைக் கண்டித்து ஒட்டன்சத்திரத் தில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சுங்கம் வசூல் செய் வதை கைவிட்டு மீண்டும் பகிரங்க ஏலம் நடத்த வேண் டும். வேடசந்தூர் வி. புதுக் கோட்டையில் மாட்டு சந்தை, விருப்பாட்சி ஊராட்சியில் கோழிச்சந்தை நடத்த அனு மதி வழங்க வேண்டும். முறைகேடாக நடந்த விருப் பாச்சி பெருமாள் குளம் மீன் பாசி ஏலத்தை ரத்து செய்து முறையாக ஏலம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஒட்டன்சத்திரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் எம். கருணாகரன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாநிலப் பொருளா ளர் கே.பி. பெருமாள், திண் டுக்கல் மாவட்டச் செயலா ளர் எம்.ராமசாமி, மாவட்டத் தலைவர் என்..பெருமாள், மாவட்டப் பொருளாளர் தயாளன், மாவட்ட துணைச் செயலாளர் அஜய் கோஷ், ஒன்றியச் செயலாளர் மனோ கரன், அகில இந்திய விவசா யத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே. அருள்செல்வன், மாவட்டத் தலைவர் பி.வசந்தாமணி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.