மதுரை, ஜூலை 3- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- அக்ரிணி வளாக வீடுகள் மற்றும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உரிமையாளர்கள் சங்கம் - இணைந்து அறிவியல் கருத்த ரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. கருத்தரங்கில், கடல்சார் ஆராய்ச்சி விஞ்ஞானி நாராயணி சுப்பிரமணியம் கலந்து கொண்டு, “சுற்றுச்சூழல் அவசர நிலை” என்ற தலைப்பில் உரையாற்றி னார். அவரது உரையில் பசுமைக்குடில் வாயு அதிகமாக உருவாகி வரும் சூழல், உலகத்தைச் சுற்றுச்சூழல் அவசரநிலை யை நோக்கித் தள்ளியுள்ளது. அதனால் தான் பருவம் தப்பிய மழை, அடிக்கடி தீவிர, அதி தீவிரப் புயல்கள் உலகமெங்கும் உரு வாகிறது. காட்டுத்தீ, கடுமையான வெப்பத் தையும் உலகம் சந்தித்த வருகிறது. இவற்றி லிருந்து விடுபடத் தனிநபர் முயற்சியும் தேவை. அதே நேரத்தில், உலக நாடுகள் தங்களது அரசியல் நிலைப்பாட்டில் மாற் றம் செய்து உலகின் சுற்றுச்சூழல் காக்க முன்வரவேண்டுமென்றார். கருத்தரங்கை தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க அக்ரிணி வளாகக் கிளை தொடங்கப்பட்டது. தலைவராக சீனி வாசன், செயலாளராக ரமேஷ், பொருளாள ராக கரோலின் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மதுரை மாவட்டச் செயலாளர் ராஜேஷ், அக்ரிணி வளாக குடியிருப்போர் சங்கத் தலைவர் விஜயலெக்ஷ்மி, தலைவர் நாராயணன், பேராசிரியர் ராஜமாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.