விளாங்குடி 20-வது வார்டில் திருவாதூர் ஆதீனம் இடத்தில் குடி யிருப்பு பகுதியில் 79-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பாதாள சாக்கடை யை இணைக்காமலும், சுமார் 7 தெருக்களுக்கு அடிப்படை வசதியான முல்லைப் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் பணிகள் இதுவரை தொடங்கவில்லை. பாரதியார் நகர் 6-வது தெருவில் தொடர்ந்து கழிவுநீர் சாக்கடை ஆறு போல் தெருக்களில் செல்கின்றது. தார் சாலை அமைக்கும் பணி களை முறையாக செயல்படுத்தவில்லை. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடமும், ஆணையாளர், மேயர் ஆகியோரிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாமன்ற உறுப்பினர் சி.நாகஜோதி சித்தன் மனுக்களை மாலையாக கட்டி கழுத்தில் அணிந்து மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தார்.
மதுரை, ஆக.26- மதுரை அறிஞர் அண்ணா மாளி கையில் மாநகராட்சி கூட்டம் வெள்ளியன்று மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையில் நடை பெற்றது. ஆணையர் பிரவீன் குமார், துணை மேயர் தி.நாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியவுடன் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள், தமிழ் நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கின்ற நீட் நுழை வுத் தேர்வை ரத்து செய்ய வேண்டு மென முழக்கத்தை எழுப்பினர். அதிமுகவினர் எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்தனர். தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதி ராக மாமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றக் கோரி மேயரிடம் கோரிக் கையை முன்வைத்தனர். இது குறித்து பரிசீலனை செய்து அடுத் தக் கூட்டத்தில் முடிவு செய்யப் படும் என மேயர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய மண்டல தலைவர்கள், குப்பை வாக னங்கள் பழுதடைந்து பல வார்டு களில் குப்பைகள் பெறுவதற்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே பழுதடைந்த வாகனங்களை சீரமைக்கவும் அதற்கான உதிரி பாகங்களை வாங்குவதற்கும், தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் நோயுற்ற தெருநாய்களை கண்ட றிந்து அவற்றுக்கு சிகிச்சை அளிக்க வும் மிகவும் நோயுற்ற தெரு நாய் களை அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
குப்பைகள் வாங்குவதற்கு வாகனங்கள் இல்லை
சிபிஎம் 96-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயா பேசு கையில், ‘‘மாமன்றத்தில் பொது மக்கள் நலம் சார்ந்த தீர்மானங்கள் இல்லை. சாக்கடை பிரச்சனை, குடிநீர் பிரச்சனை என்று தொடர்ந்து வருகிறது. இதற்கான பணியாட்கள் இல்லை. எங்கள் பகுதியில் குப்பைகள் வாங்குவதற்கு வாகனங்கள் இல்லை. மண்டலத்தில் கேட்டால் அங்குள்ள அதிகாரிகள் பக்கத்தில் உள்ள மண்டலத்தில் கேளுங்கள் என்று கூறுகிறார்கள். வரும் குப்பை வாகனங்களும் மிகவும் மோசமான தாக உள்ளன. அம்ருத் திட்டத்தின் கீழ் எங்களு டைய வார்டின் பல பகுதிகளுக்கு இன்னும் குடிநீர் குழாய் இணைப்பு என்பது வழங்கப்படவில்லை. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும். சாலையோர வியாபாரி களுக்கு கடன் கொடுக்கும் முகாம் நடத்தப்பட்டது. தற்போது 16 ஆயி ரம் சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை இல்லாமல் உள்ளனர். எனவே, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட நட வடிக்கை எடுக்க வேண்டும். சென்ட்ரல் மார்க்கெட், மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. எனவே அதை உடனடியாக பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’’ என்றார்.
சாலைக்கு ‘ஜீவானந்தம்’ பெயர் சூட்டுக!
சிபிஎம் 56-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜென்னியம்மாள் பேசு கையில், ‘‘அவுட்சோர்சிங் மூலம் வேலையை கொடுப்பதால் ஒப்பந்ததாரர்கள் மாவட்ட ஆட்சி யர் நிர்ணயித்த சம்பளம் வழங்கு வதில்லை. எனவே மாவட்ட ஆட்சி யர் அறிவித்த ஊதியத்தை 5-ம் தேதிக்குள் வழங்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். மாநக ராட்சியில் நிதி பற்றாக்குறை இருந் தால் அனைத்து கட்சி குழு தலை வர்களையும் மேயர் தலைமை யில் அழைத்து முதலமைச்சரை சந்தித்து கூடுதல் நிதி பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், 56-வது வார்டு கிராஸ் ரோடு சிவானந்தா சாலையின் பெயரை ‘ஜீவானந்தம்’ என்ற பெயர் மாற் றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சாலையின் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண் டும். எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் நூலகத்திற்கு தேவையான நூல்களை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். சேது பதி பாண்டித்துரை பள்ளியில் கூடுதல் கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறினார்.
குடிநீர் குழாய் உடைப்பு: தெருக்களில் கழிவுநீர்
திமுக மாமன்ற உறுப்பினர் நாக நாதன் பேசுகையில், ‘‘தேனி மெயின் ரோடு முடக்கு சாலை பகுதியில் மேம்பாலம் பணிகள் நடைபெறுகின்றன. இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை இணைப்பு மேல் மூடிகள் மீது சாலைகள் அமைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் 65, 66, 67 உள்ளிட்ட வார்டு பகுதிகளில் பாதாள சாக் கடை கழிவுநீர் அதிக அளவில் வெளியேறுகிறது. இவற்றை சரி செய்ய வேண்டுமென்றால் பாதாள சாக்கடை மூடிகளை சாலையை விட்டு வெளியில் எடுக்க வேண்டும், ஆனால் அது முடியாததால் பல தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கின்றது. அதேபோல் குடிநீர் குழாய் உடைப்பு பல இடங்களில் ஏற்படுகிறது. அவற்றையும் சரி செய்ய முடியவில்லை. ஹெச்.எம்.எஸ். காலனி பகுதி யில் சாலையின் மையப் பகுதியில் மின் கம்பங்கள் இருக்கின்றன. அவற்றை மாற்றியமைக்க கோரிக்கை விடுத்தும் இதுவரை செய்யப்படவில்லை. தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை நிர்வாக மும், ஒப்பந்ததாரர்கள் மெத்தனப் போக்கில் செயல்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பேசினார். கூட்டத்தில், மதுரை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநராக பணிபுரிந்து வந்த கே.சரவணனை மதுரை மாநகராட்சியின் துணை ஆணையாளராக பணியமர்த்து வது, கணினி பதிவாளர் மற்றும் மாநகராட்சி வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்துவதில் கால நீட்டிப்பு செய்வது, முல்லைப் பெரி யாறு அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தில், குடிநீர் இணைப்புக்கும் அதனை பயன் படுத்துவதற்கும் மாத கட்டணம் விதிக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகை மூலம் கடன் தொகை அடைக்கப்படுவது உள் ளிட்ட முப்பது தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.