திண்டுக்கல். செப்.19 திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் கே.ஆணைபட்டியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் வி.ராஜலிங்கம் காலமானார். அவருக்கு வயது 85. அவரது மறைவு செய்தியறிந்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளருமான என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர். சச்சிதானந்தம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வராஜ், டி.முத்துச் சாமி, மாவட்டக்குழு உறுப்பி னர் எம்.ஆர்.முத்துச்சாமி, ஒன்றியச்செயலாளர் ராஜ ரத்தினம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாலசுப்ர மணி, எஸ்.வீராச்சாமி, கிளைச்செயலாளர் பால தண்டாயுதம் ஆகியோர் அவரது இல்லத்திற்குச் சென்று ராஜலிங்கம் உடலு க்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி திங்களன்று அவரது உடல் தகனம்செய்யப் பட்டது. தோழர் ராஜலிங்கம் கட்சியின் நடத்திய போராட் டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர். கிட்டத்தட்ட 65 நாட்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். கே. ஆணைபட்டியில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங் கத்தை கட்டமைப்பதில் முனைப்புடன் செயல்பட்ட வர் ராஜலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.