தேனி, டிச.2- தேனி, கம்பத்திலிருந்து 20 மாதங்களுக்கு பின் தமிழ்நாடு-கேரளா இடையே பேருந்து போக்கு வரத்து தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நட வடிக்கை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழ் நாடு-கேரளா இடையே பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தமிழகம்- கேரளா இடையே பேருந்து போக்கு வரத்து தொடங்க இரு மாநில அரசுகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.குறிப் பாக சபரிமலையில் மண்டல சீசன் தொடங்கி இருப்பதால் பேருந்து போக்குவரத்தை தொடங்க கேரள போக்குவரத்து துறை சார்பில் தமிழக போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு புதன்கிழமை பேருந்து போக்கு வரத்துக்கு அனுமதியை வழங்கி அதற்கான உத்தரவை பிறப்பித்தது. அதன்படி தமிழக -கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டம் தேனி,கம்பம், போடி யில் இருந்து குமுளி, கம்பம், போடிமெட்டு வழியாக 20 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் மூணாறு, பூப்பாறை, நெடுங்கண் டம், ராஜாக்காடு, சாஸ்தா கோவில், கேரளப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படு கின்றன.அதேபோல் கேரள மாநிலத்தில் இருந்தும் தமிழகப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 20 மாதங்களுக்கு பின் தமி ழக-கேரள இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ள தால் இரு மாநில மக்கள், சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.