பிளாட்டினம் பஞ்சாலையில் சிஐடியு அமைப்பு உதயம்
இராமநாதபுரம், ஆக.5- இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகே சி.கே.மங்கலம் பிளாட்டினம் பஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பங்கேற்ற சிஐடியு சங்க அமைப்பு கூட்டம் மூத்த தோழர் ஏ.நாகநாதன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, விவசாயத் சங்க மாவட்டத் தலைவர் எம்.முத்துராமு, பஞ்சாலை சங்க மாவட்டச் செயலாளர் வெங்கடசுப்பிரமணியன், சிபிஎம் தாலுகா செயலாளர் ஜெயகாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் தலைவராக எம்.பழனிச்செல் வம், செயலாளராக எம். என்.முருகேசன், பொருளாளராக சசிகுமார், துணை நிர்வாகிகளாக முனியராஜ், பெஞ்ச மின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மூடப்பட்டுள்ள பிளாட்டினம் பஞ்சாலையை திறக்க வேண்டும் தொழிலா ளர்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆக.8 முதல் பரமக்குடியில் புத்தகத் திருவிழா
இராமநாதபுரம், ஆக.5- மக்கள் நூலகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் பரமக்குடி புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 8 முதல் 15 வரை சந்தைப்பேட்டை டிடிஎஸ் மஹாலில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 8 அன்று நடைபெறுகின்ற துவக்க நிகழ்ச்சிக்கு வரவேற்புக்குழு தலைவர் பெ.சேகர் தலைமை வகிக்கி றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கு. காந்தி வரவேற்கிறார். தமிழக பிற்படுத்தப்பட்டோர் -சீர் மரபினர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப் பன், மாவட்ட ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன் ஆகியோர் புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து உரையாற்றுகின்ற னர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.நவாஸ் கனி, இரா. தர்மர், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராம லிங்கம், செ.முருகேசன் ஆகியோர் பங்கேற்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு பரமக்குடி லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியிலிருந்து மாரத்தான் விழிப்பு ணர்வு ஓட்டம் துவங்குகிறது.
சாத்தூர் அருகே வீடு புகுந்து 35 பவுன் நகை கொள்ளை
சாத்தூர், ஆக.5- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பந்துவார் பட்டியை சேர்ந்தவர் பால முருகன் (40). இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட் சுமி 100 நாள் வேலை திட்டப் பொறுப்பாளராக உள்ளார். இந்த நிலையில், பாலமுருகன் வீட்டை பூட்டி விட்டு அரு கில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப் பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சிய டைந்த பாலமுருகன், உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, பீரோவில் இருந்த 35 பவுன் நகை, ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. எனவே, இதுகுறித்து சாத்தூர் தாலுகா காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழ்க்குப் பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.
போக்சோ வழக்கில் வியாபாரிக்கு 5ஆண்டு சிறை
தேனி, ஆக.5- பெரியகுளம் - தென்கரை வாகம்புளி தெருவைச் சேர்ந்தவர் காதர்மைதீன்(50). இவர் இதே தெருவில் பெட்டிக்கடை வைத்துநடத்தி வந்தார். 2020 ஆம் ஆண்டில் கடைக்கு வந்த 9 வயது சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெற்றோர் இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். காதர்மைதீன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப் பட்டு இதன் வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணை சனிக்கிழமை முடிந்த நிலையில் காதர் மைதீ னுக்கு 5ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதித்து நீதிபதி எஸ்.கோபிநாதன் தீர்ப்பளித்தார்.
விருதுநகரில் சதத்தை தாண்டி கொளுத்திய வெயில்; வெறிச்சோடிய சாலைகள்
விருதுநகர், ஆக.5- விருதுநகரில் தொடர்ந்து ஒரு வார காலமாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை சாலை கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. விருதுநகரில் சனிக்கிழமையன்று அதிகபட்ச வெப்ப நிலை 102.2 டிகிரி பாரன் `ஹீட் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டது. கடந்த ஒரு வார காலமாக விருதுநகர் மாவட்டத்தில் வெயிலின் உக்கிரம் மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், விருதுநகரில் அதிகபட்ச வெப்ப நிலை 39 டிகிரி செல்சியஸ் என பதி வாகியுள்ளது. அதாவது 102.2 டிகிரி பாரன் `ஹீட் வெப்பம் பதிவானது. அதிக வெப்பத்துடன் காற்றும் சேர்ந்து அடித்து வருவதால் பெரும் அனல் காற்று வீசத் தொடங்கியது. இதன் காரணமாக, பிர தானச் சாலைகளில் வாகன ஓட்டிகள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பொது மக்கள் தங்களது வீடுகளுக்குள் ளேயே முடங்கிக் கிடந்தனர். அக்னி நட்சத் திர நாட்களில் ஏற்படும் வெயிலின் தாக் கத்தை விட கூடுதலாக வெப்பம் இருப்ப தாக பொது மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இளநீர், மோர், நுங்கு மற்றும் பழ வகைகளின் விற்பனை அதிக ரித்து காணப்பட்டது.
குறைந்த விலையில் நகைகளை ஏலம் மூலம் பெற்றுத் தருவதாக ரூ.12.50 லட்சம் மோசடி
விருதுநகர், ஆக.5- வங்கி ஏலத்தில் குறைந்த விலையில் ஏராளமான நகைகள் வாங்கித் தருவதாக வாலிபர் ஒருவரிடம் ரூ.12.50 இலட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் எம்.அம்மன்பட்டி கோவில் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (41). விருதுநகர்-ஆலங்குளம் சாலையைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி பேச்சியம்மாள். இருவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டதாம். இந்நிலையில், தான் கூட்டுறவு வங்கி யில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்ப்ப தாக ரமேஷிடம் பேச்சியம்மாள் கூறியுள் ளார். மேலும், அவ்வங்கியில் 380 கிராம் நகைகள் ஏலத்திற்கு வர உள்ளதாகவும், ரூ.13 லட்சத்து 85 ஆயிரம் கொடுத்தால் 380 கிராம் நகைகளை ஏலம் எடுத்து தரமுடியும் எனவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பிய ரமேஷ் பணத்துடன் தனது நண்பர்களையும் அழைத்துக் கொண்டு சிவகாசி பேருந்து நிலையத்திற்கு வந்துள் ளார். பின்னர் பல்வேறு வங்கி கணக்கில் இருந்து பேச்சியம்மாளின் வங்கி கணக் கிற்கு ரூ.11 லட்சத்தை பரிமாற்றம் செய்தார். மேலும் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் ரொக்கமாக கொடுத்தாராம். பணத்தைப் பெற்று கொண்ட பேச்சி யம்மாள் நகைகளை வாங்கி வருவதாக வும் அதுவரை பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கும்படியும் கூறிவிட்டுச் சென்றுள் ளார். ஆனால் வெகுநேரமாகியும் வர வில்லை. இதனால், சந்தேகமடைந்த ரமேஷ் அவ ரது செல்லிடப்பேசி எண்ணிற்கு அழைத் துள்ளார். ஆனால், சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது. எனவே, இதுகுறித்து சிவ காசி நகர் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பேச்சியம்மாளைத் தேடி வருகின்றனர்.
அர்ச்சனை குறித்த வாட்ஸ்அப் தகவலை நம்ப வேண்டாம் பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு
பழனி, ஆக.5- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக குறிப்பு வருமாறு: “0444 2890021 என்ற எண்ணினை தொடர்பு கொண் டால் பழனி முருகன் கோயில் அர்ச்சகர் உங்களுடைய பெயர், நட்சத்திரம் கேட்பார் / அதை சொன்னவுடன் ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யப்படுவதாக தெரி வித்து பதிவு செய்துகொள் ளும் வாய்ப்பை அனை வரும் பயன்படுத்திக் கொள் ளுங்கள்” என பொய்யான தகவல்கள் வாட்ஸ்அப் வழி யாக பரப்பப்பட்டு வரு வது இத்திருக்கோயில் நிர் வாகத்தின் கவனத்திற்கு தெரியவந்தது. அவ்வாறு பொய்யான தகவல்களை உருவாக்கிய வர்கள் மீது காவல் துறை, சைபர் குற்றத் தடுப்புப் பிரி வில் சட்ட ரீதியான நட வடிக்கை மேற்கொள்ள புகார் அளிக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகம் சார்பாக இதுபோன்ற தொலைபேசி எண் மற்றும் அர்ச்சனை செய்ய ஏற்பாடு கள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை எனவும் பக்தர் கள்/ பொது மக்கள் அவ்வா றான பொய்யான தகவல் களை நம்பி ஏமாற வேண் டாம் எனவும் கோயில் நிர்வா கம் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.