districts

img

ரேசன் கடைகளை கூட்டுறவுத்துறையிடம் ஒப்படைக்காதே: சிஐடியு-நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் போராட்டம்

விருதுநகர், செப்.16- பொது விநியோகத் திட்டத்தை பாது காக்க வேண்டும். காலிப் பணியிடங்க ளை நிரப்ப வேண்டும். நெல்கொள் முதல் நிலையங்களில் ஆலை முகவர்க ளை அனுமதிக்க கூடாது. சுமைப்பணி யில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். ரேசன் கடைகளை கூட்டுற வுத்துறையிடம் ஒப்படைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட 8 அம்ச கோக்கை களை வலியுறுத்தி சிஐடியு-தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக பொது தொழி லாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகரில் மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு செயல்தலைவர் பாலகிருஷ்ணன் தலை மையேற்றார். ஸ்டாலின்ராஜா, சுப்பிரமணி யன், வெற்றிவேல், செல்வராஜ், துரை ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  துவக்கி வைத்து மண்டல செயலாளர் க.சுப்புராஜ் பேசினார். முடிவில் சிஐடியு மாவட்ட செய லாளர் பி.என்.தேவா கண்டன உரையாற்றி னார். மேலும் இதில், மாநில பொதுச் செய லாளர் ஆர்.புவனேஸ்வரன், துணை பொ துச் செயலாளர் சண்முகம் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

மதுரை 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மதுரை மண்டலம் சார்பில் மண்டல அலு வலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மண்டலச் செயலாளர் எம்.அழகுலெட்சுமணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள்  கே.பி. எம்.ஜோதிபாசு, என்.கல்யாணகுமார் ஆகி யோர் விளக்கிப் பேசினர். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கே.சண்முகம், மாநிலச் செயலாளர் கே.கதிரேசபாண்டி யன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மண்டல பொருளாளர்  ஆர்.பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.