districts

img

மதுரை நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் குழந்தைகள் தடுப்பூசி தட்டுப்பாடு

மதுரை, செப்.21- மதுரை மாநகராட்சி புதூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம்  மையத்திற்கு 10, 12, 14,.15 ஆகிய  வார்டுகளில் உள்ள  ஆயிரக்கணக்  கான பொதுமக்கள் மற்றும் மகப் பேறு தாய்மார்கள் வருகை தந்து,  பயன் அடைந்து வருகிறார்கள். தற்போது இங்கு பிறந்த குழந்தை களுக்கு போடக்கூடிய சில முக்  கிய தடுப்பூசிகள் இல்லை என்று  கூறி குழந்தைகளுடன் வரும்  தாய்  மார்களை கடந்த ஒரு மாதத்திற் கும் மேலாக திருப்பி அனுப்பி வரும் நிலை உள்ளது. புதூர் காந்திபுரம் பகுதி மகப் பேறு தாய்மார்கள் கௌசல்யா, மற்றொருவர் கௌசல்யா ஆகி யோர் அப்பகுதியில் உள்ள மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரி டம் தடுப்பூசி  தட்டுப்பாடு குறித்து கூறினர். இதைத்தொடர்ந்து அப் பகுதி  கட்சி  உறுப்பினர்கள் வடக்கு - 2 பகுதிக்குழு செயலா ளர் ஏ. பாலுவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதன் அடிப்  படையில் செவ்வாயன்று காலை தாய்மார்களை குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு வரச் சொல்லி, புதூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்திற்கு வந்த பகு திக்குழு செயலாளர்  பாலு, பகு திக்குழு உறுப்பினர்கள் முத்து, கணேசன் மற்றும் காந்திபுரம் கட்சி  உறுப்பினர்கள் மருத்துவ மனை ஊழியர்களிடம் இது குறித்து கேட்டனர். அவர்கள் செவி லியர்களிடம் பேசுமாறு கூறி னர். மருத்துவர் வந்தவுடன் பேசுங்  கள் என்று கூறிவிட்டு, தற்போது மருந்து தட்டுப்பாடு உள்ளது என்று மட்டும் செவிலியர்கள் கூறி னர். 

பின்னர் அங்கு வந்த மருத்து வர், குழந்தைகளுடன் வந்த தாய்  மார்கள் மற்றும் கட்சி நிர்வாகி களை அழைத்து பேசினார். மருந்து  தட்டுப்பாடு உள்ளது. எனவே மருந்து வந்தவுடன் தான் குழந்தை களுக்கு போட முடியும் என்று கூறி னார். அதனைத்தொடர்ந்து மற்ற ஆரம்ப சுகாதார மையங்களிலோ அல்லது மாநகராட்சி சுகாதார மையத்திற்கு தெரியப்படுத்தி மருந்து கொண்டு வரச் சொல்லுங்கள். 45 நாட்களில் போடக்கூடிய தடுப்பூசி என்பது போடப்படாமல் இரண்டு மாதங்கள் கடந்து விட்டது என்று சிபிஎம் கட்சியினர் கூறினர்.  அதற்கு மருத்துவர். மதுரையில் 31 ஆரம்ப சுகாதார மையங்கள் மாநகராட்சி பகுதியில் உள்ளது. அனைத்து இடங்களிலும் கேட்  கப்பட்டு விட்டது “நிமோ காகல்”  (பிசிவி) மருந்து மதுரை முழு வதும் தட்டுப்பாடு உள்ளது. எனவே வந்தவுடன் தான் அது  செலுத்த முடியும் என்று கூறினார்.  அப்படி என்றால் அரசு ராஜாஜி  மருத்துவமனைக்கு நீங்கள் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறியதற்கு, அப்படி பரிந் துரை செய்ய முடியாது. அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மட் டும் தான் அங்கு தடுப்பூசி செலுத்து வார்கள் என்று கூறிவிட்டார். தொடர்ந்து இதுகுறித்து மாந கராட்சி ஆணையாளர் மற்றும்  நகர் நல அலுவலர் ஆகியோரிடம் பேசிய போது, தற்போது தமி ழகம் முழுவதும் இந்த மருந்து  தட்டுப்பாடு உள்ளது. விரைவில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறி னார்.

மருந்து தயாரிப்பு துவக்கம்

இதுகுறித்து சில மருத்துவத் துறை அதிகாரிகள் கூறுகையில், பி. சி. வி. தடுப்பூசிக்கான மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  எனவே அதற்கான தயாரிப்பு பணி கள் குறைந்துள்ளது. தொடர்ந்து  மூலப்பொருட்கள் தற்போது வந்து தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளது. எனவே மருந்து தட்டுப்பாடு குறைந்து விடும் என்று கூறினர்.   மேலும் மகப்பேறு அடைந்த வர்களுக்கு ஸ்கேன் எடுப்பதற்  கான வசதி புதூர் மருத்துவமனை யில் இல்லை என்று சஹானா என்ற  9 மாத கர்ப்பிணி பெண் ஒருவர்  கூறினார். இது குறித்து அங்குள்ள  மருத்துவரிடம் கேட்டபோது ஸ்கேன் எடுப்பதற்கான பயிற்சி இன்னும் எனக்கு  வழங்கவில்லை. அதனால் பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள முத்து சாரதா மருத்துவமனைக்கு பரிந் துரை செய்கின்றோம் என்று கூறி னார். இதுகுறித்து ஆணையாரிடம் கேட்கப்பட்டபோது, முத்து சாரதா  மருத்துவமனையில் ஸ்கேன் என் பது நவீன தொழில்நுட்பத்துடன் தெளிவாக இருக்கும். எனவே தான் மருத்துவர்கள் அங்கே பரிந்  துரை செய்கிறார்கள். மற்றபடி ஸ்கேன் குறித்த தகவல்கள் அனைத்  தும் அந்தந்த மருத்துவமனை களில் தான் தெரிவிக்கப்படுகிறது என்று கூறினார்.

புதூரில் ஸ்கேன் சென்டர் அமைக்க கோரிக்கை

இந்த முத்து சாரதா ஸ்கேன் சென்டர் வடக்கு மாசி வீதியில் உள்ளது. புதூரில் இருந்து கர்ப்  பிணி ஒருவர் இவ்வளவு தூரம் பய ணம் செய்து எடுப்பது மிகவும் சிர மமான காரியம். எனவே புதூர் பகுதியினை மையப்படுத்தி ஸ்கேன் மையத்தை உருவாக்கி னால் புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் பயன டைவார்கள் என்று அங்கு வந்த கர்ப்பிணி பெண்கள் கூறினர்.
 

;