சென்னை, டிச.19- சென்னை நந்தனத்தில் 15 அரசு அலுவல கங்கள் இயங்கி வரும் வளாகத்திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டி னார். முன்னாள் அமைச்சரும் திமுகவில் நீண்ட காலம் பொதுச்செயலாளராக பணி யாற்றிவருமான க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்கத்தை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் அமைக்கப் பட்டுள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அன்பழகனின் சிலையினை முதல்வர் திறந்து வைத்தார். விழாவில் நாட்டுடமையாக்கப்பட்டுள்ள அவரின் நூல்களுக்கான நூலுரிமைத் தொகையினையும் குடும்பத்தாருக்கு வழங்கினார். அதை அன்பழகனின் மகன் அன்புச் செல்வன், பேரன் வெற்றி அழகன் எம்.எல்.ஏ. பெற்றுக் கொண்டனர். விழாவில் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகி கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். தமிழ்வளர்ச்சி செய்திதுறை செயலாளர் மகேசன் காசிராஜன் நன்றி கூறினார்.