districts

img

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தவுள்ள பள்ளிகளில் தேனி ஆட்சியர் ஆய்வு

தேனி,செப்.8- முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள தேனி மாவட்டத்தின் கடை கோடி பகுதியான கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட வண்டி யூர் ஊராட்சி ஒன்றிய துவக் கப்பள்ளியில் செப்டம்பர் 8 அன்று மாவட்ட ஆட்சித் ்தலைவர் க.வீ.முரளீதரன் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். அதனைத்தொடர்ந்து, சீலமுத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மணலாத்துக்குடிசை ஊராட்சி ஒன்றிய துவக் கப்பள்ளி மற்றும் வருசநாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் காலை உணவு வழங் கப்படவுள்ள மாணவ, மாண வியர்களின் எண்ணிக்கை, சமைப்பதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமை யல் கூடம், தேவையான சமையல் பாத்திரங்கள், உணவுப்பொருட்கள் பட்டி யல், தண்ணீர் வசதி, மின் வசதி உள்ளிட்டைவகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 பின்னர் ஆட்சியர் கூறு கையில், தேனி மாவட்டத் திற்குட்பட்ட க.மயிலா டும்பாறை வட்டாரத்தில் செயல்பட்டு வரும் 51 அரசு ஆரம்பப்பள்ளிகளில்; பயிலுகின்ற 1,342 மாண வர்களுக்கும், 1,291 மாணவி யர்களுக்கும் என மொத்தம் 2,633 மாணவ, மாணவியர்க ளுக்கு இத்திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கிட நட வடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளது.   ஒவ்வொரு ஆரம்பப் பள்ளிக்கும் உணவு தயா ரித்தலுக்காக மகளிர் திட்டத்தின் மூலம் சுய உத விக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, சமை யல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் அட்டவணை யின்படி, திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாணவ, மாணவி யர்களுக்கு காலை உணவு வழங்கிட தேவையான நட வடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளது என்று தெரி வித்தார். வகுப்பறைகளுக்குச் சென்று எழுத்துத் திறன், வாசிப்புத்திறன் குறித்து மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார். வருஷநாடு ஊராட்சி யில் 3 அரசு ஆரம்பப் பள்ளிக ளில் மாவட்ட ஆட்சித் தலை வர் ஆய்வு மேற்கொண்டார்  இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.தண்டபாணி,  கட மலை-மயிலை ஒன்றிய ஆணையர்கள் திருப்பதி முத்து, ஒன்றிய பொறியா ளர் ராமமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மணி முத்து, பொன்னழகு சின்னக் காளை, ஊராட்சி செயலர் கள் சின்னச்சாமி, முருகே சன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

;