விருதுநகர், செப்.8- தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேள னம்-சிஐடியு வின் மதுரை புறநகர் மாவட்ட செயாளர் எம்.முனியாண்டி-எம்.பழனி யம்மாள் ஆகியோரின் மகன் எம்.அறிவரசு- ஆர்.யமுனாதேவி ஆகியோரின் திருமணம் விருதுநகரில் நடைபெற்றது. அதில், சிஐடியு-கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் ஏ.கிருஷ்ண மூர்த்தி, சிஐடியு-பஞ்சாலை தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் எம். அசோகன் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் ஆர்.முனியாண்டி, எஸ்.விஸ்வரூப கேசவன், ஆர்.செந்தில்குமார், பொன்பரம சாமி ஆகியோர் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர். இதையடுத்து, மண மக்கள், சென்னையில், தொழிலாளர் கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வரும் சிஐடியு- நிர்மல் பள்ளி நிதியாக ரூ.5 ஆயிரத்தை மாநிலத் தலைவர் ஏ.கிருஷ்ண மூர்த்தியிடம் வழங்கினர். மேலும், இத் திருமண விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.