districts

மதுரை முக்கிய செய்திகள்

ஆண்டிபட்டி அருகே  மின்சாரம் தாக்கி சிறுவன் பலி 

தேனி ,அக்.21- ஆண்டிபட்டி அருகே மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கரட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்.   இவருடைய இளைய மகன் பாலாஜி (15) .இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடைய வீட்டிற்கு அருகே கொட்டகை அமைத்து மாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்நிலை யில் நேற்று முன்தினம் மாலை பாலாஜி கொட்டகையில் உள்ள மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்றுள் ளார். அப்போது கொட்டகையில் மின்விளக்கு எரியாத காரணத்தால் அதனை சரி பார்த்துள்ளார். அப்போது மின்சார வயர் அறுந்திருந்தது. அப்போது ஸ்விட்ச் போட்டிருப்பதை கவனிக்காமல் மின்சார வயரை இணைத்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி கிடந்துள் ளார். இதனைக் கண்டு அவரது பெற்றோர் அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து க.விலக்கு காவல் நிலையத்தில்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுத்தை பலியான விவகாரத்தில்  தேனி அதிமுக எம்.பி., ரவீந்திரநாத்துக்கு சம்மன்  வனத்துறை நடவடிக்கை

தேனி ,அக்.21- பெரியகுளம் அருகே சிறுத்தை பலியான சம்ப வத்தில் விசாரணைக்கு ஆஜ ராகும்படி நிலத்தின் உரிமை யாளர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் இருவருக்கு வனத் துறையினர்  சம்மன் அளித் துள்ளனர். தேனி மாவட்டம், பெரிய குளம் அருகே கோம்பை புதூர் பகுதியில் கடந்த செப் டம்பர் 28 ஆம் தேதி தேனி எம்பி ரவீந்தர்நாத் மற்றும் இருவருக்கு சொந்தமான கூட்டு பட்டா நிலத்தில்  கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. இந்த சம்பவத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி அந்த தோட் டத்தில்  ஆட்டு கிடை அமைத்து ஆடு மேய்த்து வந்த அலெ க்ஸ் பாண்டியன் என்பவரை வனத் துறையினர் வழக்கு  பதிவு செய்து கைது செய்த னர். இதே விவகாரத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி தேனி எம்.பி.யின் தோட்ட  மேலாளர்கள் தங்க வேல், ராஜவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சிறுத்தை பலியான விவ காரத்தில் தோட்டத்தில் ஆடு மேய்த்து வந்த அலெக்ஸ் பாண்டியன் மீது வனத்துறை யினர் முறைகேடாக வழக்கு பதிவு செய்து  அவரை கைது செய்துள்ளதாகவும், தோட்ட உரிமையாளராக தேனி மக்களவை உறுப்பி னர் ப.ரவீந்திரநாத் மீது வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என்று வலியு றுத்தியும், தேனியில் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தமிழ்நாடு  கால்நடை வளர்ப்போர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தேனி எம்.பி.,ரவீந்திர நாத்  மீது வழக்கு பதிவு செய் யக்கோரி கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி தேனி வடக்கு மாவட்ட திமுக செயலர் தங்க.தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினர் கே.எஸ்.சரவ ணக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் மாவட்ட  வன அலுவலர் சமர்தாவிடம் மனு அளித்தனர். சம்மன்  மாவட்ட வன அலுவலர் சமர்தா கூறுகையில், சிறுத்தை உயிரிழந்த வழக்கில், சம்பந்தப்பட்ட நிலத்தின் கூட்டுப் பட்டா தாரர்களான பெரிய குளத்தைச் சேர்ந்த மக்க ளவை உறுப்பினர் ப.ரவீந்தி ரநாத், அதே ஊரைச் சேர்ந்த காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோர் நவம்பர் 28 ஆம் தேதி முதல் 14 நாட்க ளுக்குள் தேனி வனச் சரகர் அலுவலகத்தில் விசாரணை க்கு ஆஜராக வேண்டும் என்று வனத் துறை சார் பில் சம்மன் அனுப்பப் பட்டுள்ளது என்று தெரி வித்தார்.

மருத்துவப்படிப்பு கலந்தாய்வு: மதுரையில் அரசுப்பள்ளி மாணவர்கள் 9 பேர் சேர்க்கை

மதுரை, அக். 20:   சென்னையில் நடை பெற்ற மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில்,  7.5 சதவீத இட ஒதுக்கீட் டின் கீழ், மதுரை மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்கள்  9 பேர் சேர்க்கை பெற்றுள் ளனர். தமிழகத்தில் மருத்துவப்  படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படை யில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.  இந்நிலை யில் 2022 - 23 ஆம் ஆண்டுக் கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் வியாழனன்று  தொடங்கியது. இதில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியருக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு மருத் துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி இளங்கலை மருத்து வப் படிப்பில் அரசுப்பள்ளி களைச் சேர்ந்த 455 பேருக் கும், பல் மருத்துவப் படிப் பில் 114 பேருக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலந்தாய் வில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாநகராட்சி மற்றும் அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த  மாணவ, மாணவியர் 10 பேர்  மருத்துவப் படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி மதுரை கஸ்தூரி பாய் காந்தி மாநகராட்சி பள்ளி மாணவி தீபிகா சிவ கங்கை மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி தவு பிகா நுரேன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, திரு மங்கலம் மேலக்கோட்டை அரசுப்பள்ளி மாணவர் முத்துக்குமார் விருதுநகர் மருத்துவக்கல்லூரி,  மதுரை ஈ. வே. ரா. நாகம்மையார் மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் எம். ரெய்சிகா திருச்சி சமய புரம் சீனிவாசன் மருத்து வக்கல்லூரி, பி.வி.கலை வாணி மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி,  

பி.ஜி.சசிரேகா நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி,  மகபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.தீட்சிதாஸ்ரீ தூத்துக்குடி அரசு மருத்து வக்கல்லூரி, ஈ. வே. ரா. நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.மதுமிதா ஹாசின் குன்றத்தூர் பல் மருத்து வக்கல்லூரி,  கருங்காலக் குடி அரசு பெண்கள் பள்ளி மாணவி காளீஸ்வரி மதுரை அரசு மருத்துவக்கல்லூரி, விக்கிரமங்கலம் அரசுக் கள்ளர் பள்ளி மாணவர் ஜெ.ஆதித்யன் பல் மருத்து வம் ஆகிய 10 பேர் தேர்ந் தெடுக்கப்பட்டனர். இதில் ஜெ.ஆதித்யன் பல் மருத்து வப் படிப்பை மறுத்து விட்டதால் 9 பேர் சேர்க்கை அனுமதி பெற்றுள்ளனர். மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் மதுரை மாவட்டத்தில் இரு ந்து பங்கேற்று சேர்க்கை பெற்றுள்ள 9 பேரில் எம். ரெய்சிகா பி.வி.கலை வாணி பி.ஜி.சசிரேகா எஸ். மதுமிதா ஹாசின்4 பேரும் மதுரை மாநகராட்சி ஈவேரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். இதில் எஸ்.மதுமிதா ஹாசின் பல் மருத்துவப்படிப்புக்கு சேர்க்கை பெற்றுள்ளார். இதர மூன்று மாணவிகளும் இளங்கலை மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை பெற் றுள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது.

நீர்வரத்து அதிகரிப்பால்  134 அடியை  தாண்டிய முல்லைப் பெரியாறு அணை

தேனி ,அக்.21- நீர்வரத்து அதிகரிப்பால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 134 அடியை தாண்டியது . மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வரு கிறது. இதனால் பெரும்பாலான அணை கள், குளம், நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை யால் முல்லைப்  பெரியாறு அணை நீர் மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. வெள்ளிக் கிழமை  காலை 8 மணி நிலவரப்படி அணை யின் நீர்மட்டம் 134.05 அடியாக உள்ளது. 1739 கனஅடிநீர் வருகிறது. அணையிலி ருந்து தமிழக பகுதிக்கு 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 70.69 அடியாக உள்ளது. அணை க்கு 2027 கனஅடிநீர் வருகிறது. 1319 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 408 கனஅடிநீர் வருகிறது. அணை யிலிருந்து பாசனத்திற்கு 40 கனஅடி நீரும், உபரியாக 368 கனஅடிநீரும் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 135 அடியாக உள்ளது. 30 கனஅடிநீர் பாசனத்திற்கும், மற்றவை உபரியாகவும் திறக்கப்படுகிறது.  மழையளவு  பெரியாறு -4, தேக்கடி- 6.2, கூடலூர்-  17.6, உத்தமபாளையம்- 9.4, வைகை அணை- 48, மஞ்சளாறு -8.6, சோத்துப் பாறை- 12, ஆண்டிபட்டி- 33.4, அரண்மனைப் புதூர்- 4.5, போடி -4.8, பெரியகுளம் -9 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

;