districts

ஐந்து மாநிலத் தேர்தல்: பாஜக வசூல் ரூ.611 கோடி

புதுதில்லி, டிச.4- 2021-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடந்த அசாம், கேரளம், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநி லங்களிலும் புதுச்சேரி யூனியன் பிர தேசத்திலும் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 19 அரசியல் கட்சிகள் மொத் தம் ரூ.1,100 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளன என்று ஜனநாயகத்துக் கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி கள் பெற்ற நன்கொடைகள், செலவு விவரங்களைத் தேர்தல் ஆணை யத்தில் தாக்கல் செய்துள்ளன. இந்தச் செலவு விவரங்களை ஜனநாயகத் துக்கான சீர்திருத்த அமைப்பு பெற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஐந்த மாநில சட்டமன்றத் தேர்த லில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 19 அரசியல் கட்சிகள் ரூ.1,116.81 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளன.  2021 ஆம் ஆண்டு ஐந்து மாநி லங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்க ளில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக மற்றும் காங்கிரஸ் உட்பட 19 அரசியல் கட்சிகள் ரூ.1,100 கோடிக்கு மேல் பெற்றுள்ளன, மேலும் ரூ. 500 கோடிக்கு மேல் செலவிட்டன, இதில் பெரும் பகுதி நட்சத்திரப் பிரச் சாரகர்களின் விளம்பரங்கள் மற்றும் பயணச் செலவுகளுக்குச் சென்றுள்ளது.   பாஜக அதிகபட்சமாக ரூ.611.69 கோடி பெற்று ரூ.252 கோடி செல விட்டுள்ளது. மொத்தத்தில், ஊடக விளம்பரம் உட்பட விளம்பரத்திற் காக ரூ.85.26 கோடி, நட்சத்திரங்கள் பிரச்சாரம் மற்றும் பிற தலைவர்களின் பயணச் செலவுக்காக ரூ.61.73 கோடி யும் செலவிட்டுள்ளது.  காங்கிரஸ் இரண்டாவது அதிக பட்ச தொகையான ரூ.193.77 கோடி யை பெற்றுள்ளது. ரூ.85.625 கோடி யைச் செலவழித்துள்ளது இதில் விளம் பரத்திற்காக ரூ.31.451 கோடியும், பய ணச் செலவுக்காக ரூ.20.40கோடியும் அடங்கும்.