சின்னாளபட்டி, டிச.22- திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் கணிதத் துறையின் சார்பில் கணிதமேதை ஸ்ரீநிவாச ராமானுஜரின் 134-வது பிறந்த நாள் விழா செவ்வா யன்று கொண்டாடப்பட்டது. இதில், கணிதத் துறையின் தலைவர் மற்றும் முனைவர் பேராசிரியர் பாலசுப்பிரமணியம், பேராசி ரியர் உதயகுமார், ஓய்வு பெற்ற பேராசிரியர் வீரமணி, பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) பேராசிரியர் ரெங்கநாதன், உதவிப் பேராசிரியர் முத்துக்குமார், புலத் தலைவர் முனைவர் முரளிதரன் ஆகியேர் கலந்து கொண்டனர். இதில், ஏழு வயது கணிப்பான் என்றழைக்கப் படும் குழந்தை அபிநவ் பிரத்யுஷ் எண் கணித கணக்கீடுகளை வேகமாகவும் மிகத் துல்லியமாகவும் கணித்து அனைவரையும் வியப்பூட்டினார். இதை தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.