districts

img

பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்க எதிர்ப்பு

மதுரை, டிச.16-  பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து பல்வேறு மாவட்டங்க ளில் டிசம்பர் 16 அன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மதுரை ரயில் நிலையம் எதிரில் உள்ள ஸ்டேட் பேங்க் அலுவலகம் முன்பு கருப்பு அட்டை அணிந்து அனைத்து வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பாரத் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முரு கேசன் தலைமை வகித்தார். அகில இந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சம்மேளன துணைத் தலைவர் ஆர்.பாலாஜி, ஜான் பென்சிலின், வேல்முருகன், முத்துக் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பழனி 

பழனியில் இந்திய யூனியன் வங்கியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர் சங்க செயற்குழு உறுப்பி னர் சுரேந்தர், ஒருங்கிணைப்பாளர்கள் விக்னேஷ், சந்திர காந்த், திருவேங்கடம், வங்கி ஊழியர்கள் கலந்து கொண்ட னர்.

எல்ஐசி ஊழியர்கள் ஆதரவு 

வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தத் திற்கு ஆதரவு அளித்து எல்ஐசி ஊழியர்கள் சார்பில் வத்தலக் குண்டு எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்க கிளை சங்கத் தலை வர் ரமேஷ்பாண்டியன் தலைமை வகித்தார். கிளை செயலா ளர் நாகபாண்டி, வளர்ச்சி அதிகாரி கோபால் மற்றும் முகவர் சங்கப் பொறுப்பாளர் குமரேசன்,  ஊழியர் சங்க கிளை பொறுப்பாளர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.

இராஜபாளையம்

இராஜபாளையம் கிளையில் வியாழனன்று மதிய உணவு இடைவெளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கிளை தலைவர் எம்.நாகலட்சுமி தலைமை தாங்கி னார். கிளைச் செயலாளர் சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  திருவில்லிபுத்தூர் கிளையில் தலைவர் பாண்டி குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலா ளர் கருணாகரன், பொதுக்குழு உறுப்பினர் முனீஸ்வரி உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எல்ஐசி கிளை சார்பில் வாயில் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காப்பீட்டு கழக ஊழியர் சங்க தலைவர் ஜோசப் தலைமை வகித்தார். வங்கி ஊழியர் சங்க இராமநாதபுரம் மாவட்ட தலைவர் பி.சுரேஷ், எச்எம்எஸ் சார்பில் ஹாரிஸ், மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.அண்ணாதுரை, பிரேம்குமார்,எல்ஐசி ஊழி யர்கள் அதிகாரிகள் முகவர்கள் வங்கி ஊழியர்கள் பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


 

;