மதுரை, ஜூலை 10- உடைந்த இருக்கைகள், மோசமான ஜன் னல்கள், கண்ணாடி இல்லாத ஜன்னல்கள், உடைந்துபோன தரைகள், மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தையே ஒளிரவிடும் விளக்குகள், சுத்தம் என்றால் என்ன? தூய்மை என்றால் என்ன? முதலுதவிப்பெட்டிகள் மாயம். இன்றைய பணி நிம்மதியாக முடியுமா என்ற கவலையுடன் பணிகளை அழைத்துச் செல்லும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள். இது தான் மதுரை நகரத்தில் மட்டுமல்ல மாவட்டத்தில் ஒடும் பெரும்பாலான தாழ்தளபேருந்துகள், சாதா ரண பேருந்துகளின் நிலை. பயணிகள் அச்சத்துடன் பயணிக்கிறார்களோ இல்லையோ... ஓட்டுநரும், நடத்துநரும் அச்சத் துடன் தான் பேருந்துகளை தினம் தோறும் இயக்கி வருகின்றனர் மாநகர்பேருந்துகளின் லட்சணம் குறித்து செக்கானூரணியைச் சேர்ந்த கே.மூவேந்திரன் கூறுகையில், இந்தப் பேருந்துகள் பாதுகாப் பற்றவை.
பேருந்தை நகர்த்தும் போது ஏற்படும் சப்தங்களே பயணிகளிடையே அச்சத்தை ஏற் படுத்துகிறது. தவிர பிரேக் பிடித்தால் சத்தத்து டன் நிற்கும் பேருந்துகள். ஒருநாள் வேலைக்குச் செல்லும் போது மழை பெய்தது. மேற்கூரை மோசமாக இருந்தால் பேருந்திற்குள்ளும் மழை பெய்தது. இதில் நான் மட்டுமல்ல சக பயணிகளும் நனைந்த னர். பெரும்பாலான பேருந்துகளில் தரைதளம் சேதமடைந்து உள்ளது. இந்தப் பேருந்துகளை உடனடியாக மாற்றி புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்றார் சிம்மக்கல்லைச் சேர்ந்த மற்றொரு பயணி, எம்.நிதீஷ், கூறுகையில், பேருந்துகளில் படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளது. பயணி கள் பிடித்து நிற்கும் கம்பிகளும் மோசமாக உள்ளது. பேருந்துகள் முறையாக பராமரிக்கப் படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டு மென்றார். வலியுறுத்துகிறார். பெயர் குறிப்பிடாமல் பேசிய சில அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பெரும்பாலான பேருந்துகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நட வடிக்கை எடுக்கவில்லை. சேதமடைந்த சாலை களை ஒட்டுப் போடுவது போல் பழுதடைந்த பேருந்துகளை முழுமையாக சீர்செய்யாமல் ஒட்டுப்போடும் வேலையை நடக்கிறது என்ற னர்.
இந்திய தொழிற்சங்க மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் இரா. லெனின் கூறுகை யில், மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கருத் தில் கொண்டு செய்ய வேண்டிய பணியை அரசுப் போக்குவரத்துக் கழகம் செய்யவில்லை. போதுமான பணியாளர்கள் இல்லை. புதிய வழித்தடங்கள் அறிமுகப்படுத்தப்படவில்லை. பெரும்பாலான பேருந்துகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அவற்றை அகற்றிவிட்டு புதிய பேருந்துகளை இயக்க வேண்டியது அவ சியம் என்றார். ஒரு நாளைக்கு ஒரு பேருந்து மதுரை- வாடிப்பட்டி இடையே எட்டு முறை இயக்க வேண்டுமென வைத்துக் கொண்டால். அந்தப் பேருந்து எட்டு முறையும் இயங்குகிறதா என்ற கேள்வி எழத்தான் செய்யும். பணிமணைகளில் பேருந்துகள் முடக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென்றார்.
இந்திய தொழிற்சங்க மையத்தின் மற் றொரு நிர்வாகியான ராஜேந்திரன் கூறுகை யில், மதுரை மாவட்டத்தில் 650 பேருந்துகள் இயங்குகின்றன. பெரும்பாலான பேருந்துகள் இயங்க வேண்டிய காலத்தைத் தாண்டியும் ஒடிக்கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மதுரை மாவட்டத்தில் குறைந்தது 60 ஓட்டுநர்கள்-நடத்துநர்கள் பணி ஓய்வு பெற்று விட்டனர். பேருந்துகள் எப்படி இயக்கப்படு கின்றன என்ற கேள்வி எழலாம். காலையில் பணிக்கு வரும் ஊழியர்களை கூடுதல் பணி யாற்ற வற்புறுத்துவது, மாலை இரண்டு மணிக்கு இயக்க வேண்டிய பேருந்தை ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்குவது இந்த இரண்டும் நடக்காத பட்சத்தில் பேருந்து களை பணிமனைகளில் முடக்கப்படும் என் றார். மேலும் அவர் கூறுகையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் 2,000 பேருந்துகள் வாங்கப் போவதாக கூறினார்கள். தற்போது திமுக அரசு தமிழகம் முழுவதும் 500 புதிய பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த 500 பேருந்தில் மதுரைக்கு எத்தனை பேருந்துகள் கிடைக்கும் என்ற கேள்வி யும் உள்ளது. போக்குவரத்துக்கழக நிர்வாகம் ஓட்டுநர், நடத்துநர், பராமரிப்பாளர், பழுதுநீக்குவோர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். போதுமான உதிரிபாகங்கள் வழங்க வேண்டும். மதுரை நகரின் மக்கள் தொகை, மாவட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பேருந்துகளை தமி ழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டு மென்றார்.
சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பத்திப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பெ.மூர்த்தி பேசிய தாவது:- “கிராமப்புறப் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1972-ஆம் ஆண்டு அரசுப் போக்கு வரத்து கழகத்தை முன்னாள் முதல்வர் கலை ஞர் கொண்டு வந்தார், திமுக ஆட்சிக் காலத்தில் அதிக அரசுப் பேருந்துகள் பயன்பாட் டுக்குக் கொண்டு வரப்பட்டது, திமுக ஆட்சி காலத்தில் பேருந்து வசதிகள் இல்லாத பகு திக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டு பேருந்துகள் விடப்பட்டன, கட்டணமில்லா பேருந்தில் சராசரியாக ஒரு நாளுக்கு ஐந்து லட்சத்து 56 ஆயிரம் மகளிர் பயனடைந்து வரு கிறார்கள், மதுரைக்கு 251 மாசில்லா பேருந்து கள் மற்றும் 100 மின்சார பேருந்துகள் கொள் முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் பழைய பேருந்து களுக்கு பதிலாக புதிய பேருந்துகள் கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது” என்றார்.