திருநெல்வேலி, செப்.11- நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத் தின் நிர்வாகக்குழு கூட்டம் குறிச்சி சிஐடியு அலுவல கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் நட ராஜன் தலைமை தாங்கினார். நடைபெற்ற பணிகள் குறித்து மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.முருகன் பேசினார். மேல் முடிவுகள் குறித்து சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பெருமாள் பேசினார் கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர் களுக்கு இஎஸ்ஐ மருத்துவ காப்பீடு வசதிகள் செய்து தர வேண்டும், ஆட்டோ தொழிலை பாதுகாக்க கேரளா வைபோல் தமிழ கத்திலும் ஆட்டோ தொழிலா ளர்களுக்காக தனி ஆப் ஒன்றை உருவாக்க வேண டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது. ஆட்டோ ஓட்டுநர் களுக்கு இலவச வீடு கட்டி தர வேண்டும், ஆட்டோக் களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் தினமும் 5 லிட்டர் மானிய விலையில் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த மாதம் 27ம்தேதி நெல்லை மாவட்டத்தில் ஆயிரம் ஆட்டோ தொழிலாளர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்து வது. வரும் 25 ம் தேதி நடை பெறும் சிஐடியு நெல்லை மாவட்ட மாநாட்டில் ஆட்டோ தொழிலாளர்கள் திரளாக பங்கேற்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறை வாக ஆட்டோ சங்கர் மாவட்ட பொருளாளர் எஸ்.வலதி பெருமாள் நன்றி கூறினார்.