districts

img

பாஞ்சாங்குளம் பட்டியலின மக்களைச் சந்தித்த சிபிஎம்-தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள்

தென்காசி, செப்.18-  தென்காசி மாவட்டம், சங்கரன்  கோவில் தாலுகா, கரிவலம்வந்த நல்லூரை அடுத்து உள்ளது பாஞ்  சாங்குளம் கிராமம். இந்த கிரா மத்தில்  பெட்டிக்கடை நடத்தும் மகேஸ்  வரன் என்பவர் பட்டியலின பள்ளிக் குழந்தைகளுக்கு தின்பண்டம் கொடுக்க மறுத்ததன் பின்னணி யில் இன்னும் சில தீண்டாமைக் கொடுமைகள் பாஞ்சாங்குளம் கிரா மத்தில் தொடர்வது தெரியவந்தது.  செப்டம்பர் 18 ஞாயிறன்று தமிழ்  நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் தலைவர் டி.செல்லக்  கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்டச் செயலாளர் உ.முத்துப்பாண்டியன் ஆகியோர் கிராமத்திற்கு நேரடி யாக சென்று பாதிக்கப்பட்ட பட்டிய லின மக்களைச் சந்தித்துப் பேசி னர்.

இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளி 19-06-1959 ஆம் ஆண்டு ஆட்சி யராக இருந்த என்.கிருஷ்ண சாமியால் திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பள்ளியில் முள்ளிக் குளத்தை சேர்ந்த வேலுச்சாமி, புளியங்குடியைச் சேர்ந்த அருள் ராஜ் என்பவரும் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்தப்  பள்ளியில் மொத்தம் 23 மாண வர்கள் படித்து வருகின்றனர். இவர்  களில் 13 பேர் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள், 12 பேர் மற்றொரு  சமுதாயத்தை சேர்ந்தவர்கள். 13 பட்டியல் சாதி மாணவர்களில் பிர வீன்(10), பிரதீப்(7), தமிழரசன்(10), அனிதா(9), வெங்கடேஷ்(9) கருப்பையா(10) ஆகிய மாண வர்களிடம் பேசியபோது, நாங்கள் தரையில்தான் அமர்ந்து வருகி றோம். மற்றொரு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பெஞ்சுகளில் அமர வைக்கப்பட்டு உள்ளனர். மதிய உணவிற்காக நாங்கள் வீடு களில் இருந்து தட்டுகளை எடுத்துச் செல்ல மறந்து விட்டால் பள்ளியில்  எங்களுக்கு தட்டுகள் வழங்க மாட்  டார்கள். நாங்கள் அருகில் உள்ள  அரை கிளாஸ் -க்கு (பால்வாடி) ஓடிச் சென்று தட்டுகளை எடுத்து  வருவோம். நாங்கள் முந்தா நேத்து  மிட்டாய் வாங்க கடைக்குச் சென் றோம். கடைக்காரர் கட்டுப்பாடு உள்ளது. தர மாட்டேன் என்பதை வீட்டில் சொல்லி விடுங்கள் என்ற னர். மாணவர்கள் கூறியதை அவர் களது பெற்றோர் மறுக்கவில்லை. ஆனால் ஏன் நீங்கள் பள்ளியில் சென்று ஆசிரியர்களிடம் இது குறித்து கேட்கவில்லை என கேட்ட தற்கு, நாங்கள் அன்றாடங்காய்ச்சி கள். இதற்கு நேரமில்லை. கடை  பிரச்சனை வந்ததை ஒட்டி குழந்தை கள் இந்த விஷயத்தையும் கூறி யுள்ளனர். தமிழக அரசு எங்கள்  குழந்தைகள் மற்ற குழந்தைகளு டன் சரிசமமாக பெஞ்சில் அமர்ந்து பாடம் படிக்க ஏற்பாடு செய்ய வேண்  டும் என்றனர்.

அரசுப்பேருந்து வசதி இல்லை

இந்த கிராமத்திற்கு அரசு பேருந்து வருவதே இல்லை. அதற்  கான ஏற்பாடும் இல்லை. ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க செல்லும் மாணவ, மாணவிகள் தினந்தோ றும் மினி பேருந்தில் ரூ. 34 செல வழித்து சங்கரன்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். வேலைக்குச் செல்லும் ஆண், பெண் தொழிலா ளர்கள்  நிலையும் இதுதான் என்ற னர். தலித் மக்களுக்கு மயானம் இல்லை, ஊரில் உள்ள கரைகளில் இறந்தவர்களின் உடல்களை புதைத்தும் தகனம் செய்தும் வரு கின்றனர். குறிப்பாக பள்ளியில் மாணவர் களை தரையில் அமர வைத்து தீண்டாமைக் கொடுமைகளை அரங்கேற்றியது ஆசிரியர்கள் தான் என்பது  பிஞ்சு குழந்தைகள் கூறிய தகவல்களின் இருந்து தெரியவருகிறது.

இன்று மாவட்ட ஆட்சியர் வருகை

பள்ளி பிரச்சனை குறித்து கல்  வித்துறை வட்டாரங்களில் பேசிய போது, மாணவர்கள் கூறிய தகவ லின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை நடந்துள்ளது. இன்று (திங்கள்) பாஞ்சாங்குளம் கிரா மத்திற்கு மாவட்ட ஆட்சியர் வருகை  தருகிறார். அப்போது இரண்டாம்  கட்ட விசாரணை ஆசிரியர்களிடம் நடத்துவதற்கான சாத்தியக்கூறு கள் உள்ளன. ஆசிரியர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் உ.முத்  துப்பாண்டியுடன், தாலுகா செயலா ளர்  பா.அசோக்ராஜ், தீண்டாமை  ஒழிப்பு முன்னனி மாவட்டச் செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் பி. பாலுச்சாமி, இந்திய மாணவர் சங்க  மாவட்ட தலைவர் ஈ.ஆபிரகாம், மாவட்டச் செயலாளர் எம்.அருண், இணைச் செயலாளர் எம்.முகேஷ்  குமார், மாவட்டக்குழு உறுப்பி னர் கபில்தேவ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் கே.மாடசாமி, மாவட்ட தலை வர் எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் வந்திருந்தனர்.

பாதியிலே நின்ற அங்கன்வாடி கட்டுமானப்பணி

கடைசியாக பட்டியலின மக்கள் நம்மிடம் கூறிய மற்றொரு தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இவர்கள் வசிக்கும் காலனி பகு தியில் அங்கன்வாடி மையம் ஒன்று  உள்ளது. இந்த கட்டிடம் மிகவும்  மோசமான நிலையில் உள்ளது.  இதற்கு மாற்றாக அருகில் அங் கன்வாடி மையம் கட்டுமான பணி  கடந்த சில மாதங்களாக அப்படியே நின்று விட்டது. தங்கள் குழந்தை கள் எப்படி மோசமான கட்டிடத் தில் இருப்பார்கள் என்றனர். பஞ்சாங்குளத்தில் வசிக்கும்  பட்டியல் இனமக்கள் மற்றொரு சமு தாயத்தினரின் நிலங்களில்  கூலி வேலை செய்துவருகின்றனர். தற் போது வேலை மறுக்கப்பட்டுள்ள தால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த ஊரில் மொத்தம் இரண்டு கடைகள் உள்ளன. ஒரு  கடைக்காரர் சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். மற்றொரு கடைக காரர் “எனக்கு இந்த கிராமமும்  கிராம மக்களும் முக்கியம். எனவே நான் ஊர் கட்டுப்பாட்டை ஏற்க தயார் இல்லை” எனக் கூறி தலித்  மக்களுக்கு பொருட்கள் வழங்கி  வருவது சற்று ஆறுதல் அளிப்ப தாக உள்ளது. இருப்பினும் அரசி  உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் கள் வாங்க சங்கரன்கோவிலுக்கு சென்றுவர 34  ரூபாய் செலவழிக்க  முடியாத நிலையில் உள்ளனர்.

பள்ளி ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்திடுக!

பட்டியல் இன மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள தீண்டாமை  கொடுமை குறித்து செய்தியாளரி டம் டி.செல்லக்கண்ணு, உ.முத்துப்  பாண்டியன் ஆகியோர் கூறுகை யில்,  தீண்டாமைக் கொடுமைகளை கடைப்பிடித்த பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியல் இன  மக்களுக்கு கடையில் பொருட்கள் வழங்க மறுப்பதால் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்களை நிவாரணமாக வழங்க வேண்டும். பள்ளி மாண வர்கள் மற்ற மாணவர்கள் போல் பெஞ்சில் அமர்ந்து படிப்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக  தட்டுகள் வழங்க வேண்டும். அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். கிராமத்திற்கு அரசு பேருந்துகள் சென்று வரு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்  டும் என்று வலியுறுத்தினர்.

;