விருதுநகர், ஜூலை 4- விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக மு.மீனாட்சி சுந்தரம் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் ஏற்கனவே, விருதுநகர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் செயலா ளர், மாவட்ட தலைவர் தலைவர், சிவ காசி சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற இளைஞர் காங்கி ரஸ் தலைவர், விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த வர். மாவட்ட செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட் டுள்ள மு.மீனாட்சி சுந்தரத்திற்கு, விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் சிவகாசி எம்.எல்.ஏ அசோ கன், மாவட்ட தலைவர்கள், ஸ்ரீராஜா சொக்கர், ரெங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.