தூத்துக்குடி, செப். 29 தூத்துக்குடி மாநகராட்சியில் 1100 தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்வது தொடர்பாக மாநகர கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் வியாழனன்று நடை பெற்றது. ஆணையாளர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்த னர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: தூத்துக்குடி சிவந்தா குளத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வருவதற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இரண்டு வேன்களை வழங்கியுள்ளது. அதனை இயக்குவதற்கு 2 ஓட்டுநர்களை நகர்புற வாழ்வாதார மையம் மூலம் பணிய மர்த்துதல். அதே திட்டத்தில் தேவைப்படும் பிளம்பர் பணியிடத்தை நிரப்புதல் ஆகிய பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. புதிய கட்டுமானப் பணி இடங்களுக்கு ஒப்பந்ததாரர் நியமனம் செய்தல், மாநகராட்சி வழக்கறிஞர் நியமனம் செய்தல், மாநகர பகுதிக ளில் குடிநீர் திட்ட பணி மற்றும் பாதாளச் சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப் பட்ட சாலைகளை மற்றும் சேதமடைந்த சாலை களை தமிழ்நாடு சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் 2022-2023கீழ் ரூ.14 கோடியே 15 லட்சத்தில் மேற்கொள்ள ரூ. 13 கோடியே 29 லட்சத்தில் தொழில்நுட்ப அனுமதி அளித்தல். மாநகராட்சி கடைகளுக்கு ஒப்பந்ததாரர் தேர்வு செய்தல், தூத்துக்குடி நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக 5-8-2008 அன்று தரம் உயர்த்தப்பட்ட போது அருகில் இருந்த ரூரல், சங்கரபேரி,மீளவிட்டான், முத்தையாபுரம் மற்றும் அத்திமரப்பட்டி ஆகிய 5 பஞ்சாயத்து களை சேர்த்து 60 வார்டுகள் உள்ளடக்கிய தாகும். மாநகராட்சிக்கான அடிப்படை பணிக ளுக்குத் தேவையான பணியாளர்களுக்கு அரசிடம் இருந்து அனுமதி அளிக்கப்பட வில்லை.
எனவே நிர்வாக அனுமதியின்படி நகர்புற வாழ்வாதார மையம மூலம் தினக்கூலி அடிப் படையில், துப்புரவு பணியாளர்கள் பள்ளி கழிவறை பராமரிப்பு, தூய்மைப் பணியா ளர்கள், வாகன ஓட்டுனர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், சூப்பர்வைசர்கள், கணினி இயக்குபவர்கள் என 1100 தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திற்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பதற்கு பதிலாக ரயில்வே மேம்பாலம் அமைக்க நட வடிக்கை மேற்கொள்ளஅமைச்சர் கீதாஜீவன் வழங்கிய கடித அறிவுறுத்தலின்படி நடவ டிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு களை அகற்றவும் மாநகராட்சி இடங்களை கண்டறிந்து பாதுகாக்கவும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமனம் செய்தல், போல்பேட்டை 60 அடி சாலையில் 49 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும். மாநகராட்சி மைய அலுவலகம், மண்ட லங்கள் மற்றும் பூங்காக்களில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் வழங்க ஒப்புதல் அளித்தல் மற்றும் நிர்வாக பணிகளுக்கான அனுமதி அளித்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.