இராமநாதபுரம், ஜூன் 12- இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சிக்கல் மேற்கு காலனி காந்தி நகர் பகுதியில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது. கால்வாயை பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் போஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சிக்கல் ஊராட்சி கழிவுநீர் கால்வாயை தரமாக கட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.