அங்கன்வாடிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் செவ்வாயன்று (செப்.27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விஜயலெட்சுமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் சிங்காரன், செயலாளர் கே.தங்கமோகன், மாநிலக்குழு உறுப்பினரகள் இந்திரா, சந்திரகலா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.