10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையங்கள் ஆக்குவதையும் ஐந்து குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம். உமாராணி தலைமையில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது சிஐடி யு மாவட்ட செயலாளர் எம் சிவாஜி துவக்கி வைத்து பேசினார் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம் மல்லிகா கோரிக்கைகளை விளக்கி பேசினார் மாவட்ட பொருளாளர் கலாவதி நன்றி கூறினார்.